Showing posts with label roja malare raajakumari. Show all posts
Showing posts with label roja malare raajakumari. Show all posts

Thursday, May 28, 2015

ரோஜா மலரே ராஜகுமாரி - roja malare raajakumari

ரோஜா மலரே ராஜகுமாரி ஆசைக் கிளியே அழகிய ராணி
அருகில் வரலாமா 
வருவதும் சரிதானா உறவும் முறைதானா

வாராய் அருகே மன்னவன் நீயே
காதல் சமமன்றோ 
வேதம் இலையன்றோ காதல் நிலையன்றோ

ஏழை என்றாலும் ராஜகுமாரன் ராஜா மகளின் காதல் தலைவன்
உண்மை இதுவன்றோ
உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ

வானத்தின் மீதே பறந்தாலும் காக்கை கிளியாய் மாறாது
கோட்டையின் மேலே நின்றாலும் ஏழையின் பெருமை உயராது
ஓடி அலைந்து காதலில் கலந்து நாட்டை இழந்தவர் பலரன்றோ (2)
மன்னவர் நாடும் மணிமுடியும்  மாளிகை வாழ்வும் தோழியரும்
பஞ்சணை சுகமும் பால் பழமும் படையும்  குடையும் சேவகரும்
ஒன்றாய் இணையும் காதலர் முன்னே கானல் நீர் போல் மறையாதோ  (2) -- (ரோஜா மலரே)

பாடும் பறவைக் கூட்டங்களே பச்சை ஆடை தோட்டங்களே
விண்ணில் தவழும் ராகங்களே வேகம் போகும் மேகங்களே
ஓர் வழி கண்டோம் ஒரு மனமானோம் வாழிய பாடல் பாடுங்களேன் 

ரோஜா மலரே ராஜகுமாரி
ஏழை என்றாலும் ராஜகுமாரன் 
உண்மை இதுவன்றோ
உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ