Showing posts with label en kannai pidingikoll. Show all posts
Showing posts with label en kannai pidingikoll. Show all posts

Thursday, May 28, 2015

என் கண்ணைப் பிடிங்கிக்கொள் - en kannai pidingikoll

என் கண்ணைப் பிடிங்கிக்கொள் பெண்ணே 
எனை காதல் குருடன் ஆக்கி விடு 
உன்னை மட்டும் கண்டு கொள்ள 
ஒரு செயற்கை கண்ணை பொருத்திவிடு 
யானை தடவும் குருடன் கதை போல 
தடவி தடவி உன்னை பார்ப்பேனே 

சிற்பம் போல இந்த உடல் நான் தொட்டு பார்த்ததும் குழைகிறதே 
எங்கே எங்கே உந்தன் இடை தொட்டு பார்த்தும் கூட அது கிடைக்கலேயே 

கோடி கோடியாய் பெண் கூட்டம் கடந்து போய்வரும் வீதியிலே 
இதயம் உனக்கு முன்னால் படுத்து மறியல் பண்ணுதே
கூந்தல் சாட்டையை சுழட்டுகிறாய் கண்ணீர் குண்டுகள் வீசுகிறாய் 
உனது இம்சை இன்பம் இன்பம் என்றே தோன்றுதே 
அழகென்னும் விஷம் ஏறுதே உந்தன் கண்ணாலே
விஷம் கூட அமுதாகுதே பெண்ணே உந்தன் காதலாலே 
வா வா வா வந்து தீண்டி விடு -- (என் கண்ணைப்)

காதல் என்பது வன்முறையா கண்கள் தான் அதன் செய்முறையா 
கண்கள் ரெண்டும் உரசும்போது இதயம் எரியுதே 
பெண்மை என்பது எரிமலையா பூவில் சிந்திடும் பனிமலையா 
இரும்பு நெஞ்சம் பூவின் காம்பாய் கொஞ்சம் வளையுதே
மனமின்று பொம்மயானதே பெண்ணே உன்னாலே
கொஞ்சி கொஞ்சி தலையாட்டுதே உன்னைக்கண்டு ஆசையாலே 
வா வா வா வந்து விளையாடு -- (என் கண்ணைப்)