Showing posts with label aedho oru pattu- male version. Show all posts
Showing posts with label aedho oru pattu- male version. Show all posts

Saturday, June 13, 2015

ஏதோ ஒரு பாட்டு - aedho oru pattu (male version)

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும் 
கேட்கும் போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும் 
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும் 
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும் 
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும் 
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே 
தொட்டாசிணுங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்து போனதே எனக்கு எந்தன் ஞாபகம்