Showing posts with label anjali anjali anjali. Show all posts
Showing posts with label anjali anjali anjali. Show all posts

Saturday, June 13, 2015

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி - anjali anjali anjali

அஞ்சலி அஞ்சலி அஞ்சலி சின்ன கண்மணி கண்மணி கண்மணி
அஞ்சலி அஞ்சலி அஞ்சலி மின்னும் மின்மினி மின்மினி மின்மினி
அம்மம்மா பிள்ளைக்கனி அங்கம்தான் தங்கக்கனி 
பொன்மணி சின்ன சின்ன கண்மணி மின்ன மின்ன 
கொஞ்சிட கொஞ்சிட ஒரு கண்மேனி 
புன்னகை சிந்திட ஒரு பொன்மேனி 
முத்தமும் தந்திடும் சிறு பூமேனி 
கண்படும் கண்படும் இந்த பொன்மேனி

ஆகாயம் பூமி எல்லாம் இறைவன் உண்டாக்கி வைத்து 
ஆசை தான் தீராமலே உன்னை தந்தான் அம்மா 
கண்ணே உன்மேல் மேகம் தான் பன்னீர் தூவி நீராட்டும் 
துள்ளி தாவும் மான் குட்டி சொல்லி சொல்லி தாலாட்டும் 
நடக்கும் நடையில் ஒரு பல்லாக்கு சிரிக்கும் சிரிப்பும்  ஒரு மத்தாப்பு 
உனது அழகுக்கென்ன ராஜாத்தி உலகம் நடந்து வரும் கைதட்டி 
வராமல் வந்த தேவதை உலாவும் இந்த வெள்ளி தாரகை 

பூப்போல கண்ணாலே தான் பேசும் சிங்காரமேனி 
அன்னம் போல் நம்மோடு தான் ஆடு எப்போதும் நீ 
வானம் வாழும் ஏஞ்சல் தான் வண்ணப் பாப்பா அஞ்சலி தான் 
அம்மா நெஞ்சில் ஊஞ்சல் தான் ஆடிப்பார்க்கும் அஞ்சலி 
நடந்து நடந்து வரும் பூஞ்செண்டு பறந்து பறந்து வரும் பொன்வண்டு 
எடுக்க எடுக்க இரு கைகொண்டு இனிக்க இனிக்க வரும் கற்கண்டு 
நிலாவை போல ஆடிவா 
நிலாமல் கூட நீயும் ஓடி வா