Showing posts with label Kaadahala Kaadhaala. Show all posts
Showing posts with label Kaadahala Kaadhaala. Show all posts

Friday, August 31, 2012

காதலா காதலா காதலால் - Kaadhala Kaadhala

காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன் 
காதலி காதலி காதலில் தவிக்கிறேன் 
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன் 

நாள் தோறும் வீசும் பூங்காற்றைக் கேளு 
என் வேதனை சொல்லும்
நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று 
உன் நியாபகம் கொல்லும் 
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி தத்தித்தவிக்கையில் கண்ணில் மழைத்துளி 
இந்த ஈரம் என்று மாறுமோ 

ஓயாத தாபம் உண்டான நேரம் 
நோயானதே நெஞ்சம் 
ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன் 
தீயானதே மஞ்சம் 
நடந்தவை எல்லாம் கனவுகள் என்று மணிவிழி மானே மறந்திடு இன்று 
ஜென்ம பந்தம் விட்டு போகுமோ