Showing posts with label புது வெள்ளை மழை. Show all posts
Showing posts with label புது வெள்ளை மழை. Show all posts

Thursday, July 16, 2015

புது வெள்ளை மழை - pudhu vellai mazhai

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது 
இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது 
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது 
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது 

நதியே நீயானால் கரை நானே 
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே 

பெண் இல்லாத ஊரிலே அடி ஆன் பூ கேட்பதில்லை 
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூ பூப்பதில்லை 
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது 
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது 

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ திடுக்கென்று மலரும் 
நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும் 
இரு கைகள் தீண்டாத பெண்மையை என் கண்கள் பந்தாடுதோ 
மலர்மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ