Showing posts with label காதலெனும் தேர்வெழுதி. Show all posts
Showing posts with label காதலெனும் தேர்வெழுதி. Show all posts

Saturday, June 13, 2015

காதலெனும் தேர்வெழுதி - kadhalenum thervezhuthi

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவன் நான்
உன் எண்ணம் என்னும் ஏட்டில் என் எண்ணை பார்த்த போது 
நானே என்னை நம்பவில்லை எந்தன் கண்ணை நம்பவில்லை 
உண்மை உண்மை உண்மை உண்மை அன்பே உன்மேல் உண்மை 
உன் வசம் எந்தன் பெண்மை 

டோலி டோலி டோலி டோலி டோலி டோலி டோலி (2)

இந்த வளைக்கையில் வளையல்கள் நானல்லவா 
இன்று வளைக்கையை வளைக்கின்ற நாளல்லவா 
சுகம் வளைக்கையை வளைக்கையில் உண்டானது 
மேன்மேலும் கை வளை வளை என ஏங்காதோ
இது கன்னங்களா இல்லை தென்னம்கள்ளா 
இந்த கன்னமெல்லாம் உந்தன் சின்னங்களா
இங்கு நானிருந்தேன் வெறும் மெய் எழுத்தாக நீ வந்து சேர்ந்ததாய் உயிரெழுத்தாக 

உந்தன் மடியினில் கிடப்பது சுகம் சுகம் 
இந்த சுகத்தினில் சிவந்தது முகம் முகம் 
மனம் இதற்கென கிடந்தது தவம் தவம் 
ஆனந்தமே இனி இவன் உயிர் போனாலும் 
என்றும் ஓய்வதில்லை இந்த காதல் மழை 
கடல் நீளம் உள்ள அந்த காலம் வரை 
இது பிறவிகள் தோறும் விடாத பந்தம் பிரிவெனும் தீயில் விழாத சொந்தம்