Showing posts with label அதிசய ராகம். Show all posts
Showing posts with label அதிசய ராகம். Show all posts

Saturday, June 13, 2015

அதிசய ராகம் - adhisaya ragam

அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம் 

வசந்த காலத்தில் மழை தரும் மேகம் 
அந்த மழை நீர் அருந்த மனதினில் மோகம் 
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம் 
இந்திரலோகத்து சக்கரவாகம் 

பின்னிய கூந்தல் கருநிற நாகம் 
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம் 
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம் 
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம் 

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி 
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி 
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி 
முழுவதும் பார்த்தால் அவளொரு பைரவி