Showing posts with label Maanin iru kangal. Show all posts
Showing posts with label Maanin iru kangal. Show all posts

Thursday, July 10, 2014

மானின் இரு கண்கள் - Maanin iru kangal

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே 
தேனின் சுவை கன்னம் கொண்ட தேனே தேனே 
உள்ளதெல்லாம் அள்ளித்தரவா வா வா 
வஞ்சி என்றும் வள்ளலல்லவா காதல் 
மல்லிகை வண்டாட்டம் தான் 
போடு நீ கொண்டாட்டம் தான் 

முக்குளித்து முத்தெடுத்து சொக்கத்தங்க நூலெடுத்து 
வக்கணையாய் நான் தொடுத்து 
வண்ணமொழி பெண்ணுக்கென காத்திருக்க 

வைகுழலில் பூ முடித்து மங்கலமாய் பொட்டு வைத்து 
மெய்யணைக்க கையணைக்க 
மன்னவனின் நல்வரவை பார்த்திருக்க 

இன்னும் ஒரு ஏக்கம் என்ன என்னைத்தொடக் கூடாதா
உன்னைத்தொட தேனும் பாலும் வெள்ளம் என ஓடாதா 
முன்னழகும் பின்னழகும் ஆட 
இளமை ஒரு முத்திரையை வைப்பதற்கும் வாட 
மயக்கும் இள -- (மானின் இரு)

ஊசியிலை காடிருக்க உச்சிமலை மேடிருக்க 
பச்சக்கிளி கூடிருக்க பக்கம் வர வெட்கம் என்ன மாமனுக்கு 
புல்வெளியில் மெத்தையிட்டு மெத்தையிலே உன்னையிட்டு 
சத்தமிட்டு முத்தமிட உத்தரவு இட்டுவிடு நீயெனக்கு 
அந்திபகல் மோகம் வந்து அங்கும் இங்கும் போராட 
எந்தப்புரம் காணும் போதும் அந்தப்புரம் போலாக 
செங்கரும்பு சாரெடுக்கத்தானே உனக்கு ஒரு சம்மதத்தை தந்துவிட்டேன் நானே 
மயக்கும் இள -- (மானின் இரு)