Showing posts with label Maalaiyil yaaro. Show all posts
Showing posts with label Maalaiyil yaaro. Show all posts

Thursday, August 18, 2011

மாலையில் யாரோ - Maalaiyil yaaro

மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே, ஓ, மோகம் வந்ததோ
மோகம் வந்ததும், ஓ, மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது...அதில் நாயகன் பேரெழுது

வருவான் காதல் தேவன் என்று காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி என்று காவல் மீற
வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப்பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட வளர்த்தேன் ஆசைக்காதலை

நெஞ்சமே பாட்டெழுது...அதில் நாயகன் பேரெழுது

கறை மேல் நானும் காற்று வாங்கி விண்ணைப் பார்க்க
கடல் மீன் கூட்டம் ஓடி வந்து கண்ணைப் பார்க்க
அடடா நானும் மீனைப் போல கடலில் வாழக்கூடுமோ
அலைகள் வெள்ளி ஆடை போல உடலின் மீது ஆடுமோ
நெஞ்சமே பாட்டெழுது...அதில் நாயகன் பேரெழுது