Showing posts with label Pengal nenjai. Show all posts
Showing posts with label Pengal nenjai. Show all posts

Tuesday, September 18, 2012

பெண்கள் நெஞ்சை - Pengal nenjai

பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா 
உதட்டுக்கும் உதட்டுக்கும் சண்டை போடவா 
உன்னிடத்தில் உள்ளதெல்லாம் அள்ளிக்கொள்ளவா 
உன் உடம்புக்குள் உயிர் மட்டும் விட்டுச்செல்லவா 
உன் வேரோடு மழை சிந்த வரவா உன் வெட்கத்தை குளிப்பாட்ட வரவா 
குளிப்பாட்டி அழுக்காக்கவா 

ஏய் சண்டை போடவா...ஏய் விட்டுச்செல்லவா 


மொட்டுக்கெல்லாம் தும்மல் வந்தால் மலர்ந்து விடும் 

மோகம் வந்தால் பெண்ணின் உள்ளம் திறந்து விடும் 
முட்டைக்குள்ளே மஞ்சளுக்கும் கொழுப்பிருக்கும் 
உன் முடி முதல் கால் வரை கொழுப்பிருக்கும் 
விழிகள் அளந்தால் இலக்கணம் இருக்கும் 
விரல்கள் அளந்தால் இலக்கியம் இருக்கும் 
பட்டுக் கைகளால் நீ தொட்டுக்கிடந்தால் பாறையும் இளமை சுரக்கும் 
பாலாற்றை நீராட்ட வா 
ஏய் படவா நீ தொடவா நான் தொடவா ஏய் மாதவா 

கண்ணு காத்து மூக்கு மட்டும் தொட்டுவிட்டு போ 

கற்பை மட்டும் கொஞ்ச காலம் விட்டுவிட்டு போ 
தொலைந்த என் தூக்கம் எங்கே தந்து விட்டு போ 
தலையணை சுகம் இல்லை சொல்லிவிட்டு போ 
பதினெட்டு வருடம் பழுத்த என் அழகு
பதினெட்டு நொடியில் சமர்ப்பணம் உனக்கு 
உன்னைக் கலந்தால் முந்நூறு வருஷம் நான் கொண்ட இளமை நிலைக்கும் 
மோட்சத்தில் மூப்பேதடா 
ஏய் படவா நீ தொடவா நான் தொடவா ஏய் மாதவா