Showing posts with label manadhile oru paattu. Show all posts
Showing posts with label manadhile oru paattu. Show all posts

Thursday, May 28, 2015

மனதிலே ஒரு பாட்டு - manadhile oru paattu

மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதை கேட்டு 
இது பூபாளம் புது ஆலோலம் விழி பூவும் மலரும் காலை நேரம்

காற்று பூவோடு கூடும் காதல் சங்கீதம் பாடும் 
பார்த்து என்னுள்ளம் தேடும் பாசம் அன்போடு மூடும் 
இதயம் போடாத லயமும் கேட்டு இளமை பாடாத கவிதை பாட்டு -- (2)
இமைகளில் பல தாளம் இசைகளை அது கூறும் 
இரவிலும் பகலிலும் உனைப் பார்த்து பார்த்து பார்வை வாடும் -- (மனதிலே ஒரு பாட்டு)

நீயும் நூறாண்டு வாழ நேரம் பொன்னாக மாற 
நானும் பாமாலை போட தோளில் நான் வந்து சூட 
எனது ராகங்கள் எழுதும் வேதம் புதிய தாகங்கள் விழியில் ஊரும் -- (2)
இது ஒரு சுக ராகம் இதில் வரும் பல பாவம் 
இனிமைகள் தொடர்கதை இனி சோகம் ஏது சேரும் போது -- (மனதிலே ஒரு பாட்டு)