Showing posts with label Thaenae thenpaandi meenae. Show all posts
Showing posts with label Thaenae thenpaandi meenae. Show all posts

Friday, July 18, 2014

தேனே தென்பாண்டி மீனே - Thaenae thenpaandi meenae

தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே 
மானே இளமானே 
நீதான் செந்தாமரை ஆரிராரோ 
நெற்றி மூன்றாம் பிறை தாலேலேலோ 

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே 
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே 
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு நீயும் அதை ஆளலாம் 
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம் 
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை  (தேனே தென்பாண்டி மீனே...)

பால் கொடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயல 
பால் மணத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே 
பாதை கொஞ்சம் மாறி போனால் பாசம் விட்டுப் போகுமா 
தாழம்பூவை தூர வைத்தால் வாசம் விட்டுப் போகுமா 
ராஜா நீதான் நானெடுத்த முத்துப் பிள்ளை (தேனே தென்பாண்டி மீனே...)