Showing posts with label Thaiyatha thaiyathaa. Show all posts
Showing posts with label Thaiyatha thaiyathaa. Show all posts

Saturday, September 10, 2011

தையத்தா தையத்தா - Thaiyathaa


தையத்தா தையத்தா தைய தைய தா
பைய்யத்தா பைய்யத்தா பஞ்சு முத்தம் தா
உயிர் வாழ்கிற வரைக்கும் உனக்கே மடி கொடுப்பேன்
இனி ஓர் ஜென்மம் இருந்தால் உனக்கே மீண்டும் பிறப்பேன்

உனது கனவில் நினைவில் உருவில் நானே என்றும் இருப்பேன்

நிலங்கள் உடைந்து போனாலும் நிழல்கள் உடைவதில்லை
நேசம் பாசம் நிஜமானது
மழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை
அன்பே நம் காதல் அது போன்றது
பெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை
சொன்னதை செய்தாலே நிகரேதும் இல்லை
நீ உறுதியானவன் என் உரிமையானவன்
பசி ருசியை பகல் இரவை பகிர்ந்து கொள்ளும் தலைவன்

பிறவி வந்து போனாலும் உறவு முறிவதில்லை
உயிரை உயிரால் முறுக்கேற்ற
வா
உன்னைப் போன்ற அன்பாளன் யார்க்கு வாய்க்கும் மீண்டும்
உடலை உடலால் குளிப்பாட்ட வா
ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா
மறுகணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும்
உன்னை இறுக்கி அணைக்கிறேன் உயிர் நுரைக்க ரசிக்கிறேன்
அணுஅணுவாய் உனைப்பிளந்து என் ஆயுள் அடைப்பேன்