Showing posts with label Aasaiya kaaththula. Show all posts
Showing posts with label Aasaiya kaaththula. Show all posts

Thursday, July 24, 2014

ஆசைய காத்துல - Aasaiya kaaththula

ஆசைய காத்துல தூது விட்டு ஆடிய பூவுல வாட பட்டு 
சேதிய கேட்டொரு சாடை தொட்டு பாடுது பாட்டு ஒன்னு 
குயில் கேக்குது பாட்ட நின்னு 

வாசம் பூ வாசம் வாலிப காலத்து நேசம் 
மாசம் தை மாசம் மல்லிய பூ மணம் வீசும் 
நேசத்துல வந்த வாசத்துல நெஞ்சம் பாடுது ஜோடிய தேடுது 
பிஞ்சும் வாடுது வாடையில 
கொஞ்சும் சாடைய போடுது பார்வையில் 
சொந்தம் தேடுது மேடையில 

தேனு பூந்தேனு தேன்துளி கேட்டது மானு 
மானு பொன் மானு தேயில தோட்டத்து மானு 
ஓடி வர உன்னை தேடி வர தாழம்பூவுல தாவுற காத்துல 
தாகம் ஏறுது ஆசையில 
பாக்கும் போதுல ஏக்கம் தீரல 
தேகம் வாடுது பேசையில