Showing posts with label மாசி மாசம் ஆளான. Show all posts
Showing posts with label மாசி மாசம் ஆளான. Show all posts

Friday, July 17, 2015

மாசி மாசம் ஆளான - maasi maasam aalaana

மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் உனக்கு தானே 
நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமா உனக்கு தானே
பூவோடு ஆ தேனாட 
தேனோடு ஓ நீயாடு 

ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க 
நெருங்க நெருங்க பொறுங்க பொறுங்க ஓஹோஹோ 
ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளி தேன் கொள்ள வந்தால் 
மயங்கி கிறங்க கிறங்கி உறங்க ஓஹோஹோ 
வெப்பம் படருது படருது வெட்கம் வளருது மலருது 
கொட்டும் பனியிலே பனியிலே 
ஓட்டும் உறவிலே உறவிலே 

காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம் 
படித்து படித்து எடுக்க எடுக்க ஓஹோஹோ 
ஆசை ஆஹா பிரமாதம் மோக கவிதா பிரவாகம் 
தொடுத்து தொடுத்து முடிக்க முடிக்க ஓஹோஹோ 
கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது ஓஹோஹோ 
உறவோ நெருங்குது நெருக்குது உலகம் மயங்குது உறங்குது