Showing posts with label Nee aandavana. Show all posts
Showing posts with label Nee aandavana. Show all posts

Wednesday, September 7, 2011

நீ ஆண்டவனா - Nee aandavana

நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே 
கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே  எனக்கில்லையே 
கண்ணீர் என்ன கண்ணா நான் உன் மாமனே 
மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே 

தாய் பாஷை அறியாத புது இந்தியன் நீ என்றால் பொயில்லையே
தன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய் உன்போலே ஊரில்லையே 
இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்  
ஒரு கண்ணால் பார்க்கிறாய் ஒதுக்கீடு கேட்கிறாய் 
தாலாட்டிட மொழியுண்டு வளர்வாய் பிறையே 
பாலூட்டிட வழியில்லை அதுதான் குறையே 
உந்தன் சோகம் சொன்னால் ஏக்கம் போய்விடும் 
எங்கள் சோகம் சொன்னால் உன் தூக்கம் போய் விடும் 


கலைகின்ற மேகங்கள் சபை கூடியே வான் வெளியில் தாலாட்டுதே 
தரைநின்ற பிறை ஐந்து கைவீசியே சூரியனை தாலாட்டுதே
முடியாத யாத்திரை முடிகின்ற வேளையில்
முத்தங்கள் தந்து நீ முள்ளானாய் சேலையில் 
நீ என்பது என் வாழ்வில் வரவா செலவா 
முள்ளென்பது ரோஜாவில் உறவா பகையா 
காலம் செய்த கோலம் நீ இங்கே வந்தது 
கண்ணீரோடு வந்து கண்ணீர் சேர்ந்தது