Showing posts with label Paneeril nanaintha pookal. Show all posts
Showing posts with label Paneeril nanaintha pookal. Show all posts

Wednesday, September 7, 2011

பன்னீரில் நனைந்த - Paneeril nanaintha pookal

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க 
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க 
வசந்தம் வரும் காலம் விழியில் வண்ண கோலம் 
கூ கூ குக்கூ கூ - கூ கூ குக்கூ கூ
சத்தம் கண்டு சந்தம் கொண்டு பாட்டு பாடு  குயிலே 

நானும் ஒர் தென்றல் தான் ஊரெல்லாம் சோலைதான் 
எங்குமே ஓடுவேன் 
நதியிலே நீந்துவேன் மலர்களை ஏந்துவேன் 
எண்ணம் போல் வாழுவேன் 
தந்தன தான தன தந்தன தான தன
இளமைக்காலம் மிக இனிமையானது 
உலகம் யாவும் மிக புதுமையானது 

மாளிகை சிறையிலே வாழ்ந்த நாள் வரையிலே 
சுதந்திரம் இல்லையே 
விடுதலை கிடைத்தது வாசலும் திறந்தது 
பறந்தது கிள்ளையே
தந்தன தான தன தந்தன தான தன
நிலவும் நீரும் இந்த அழகு சோலையும் 
எளிமையான அந்த இறைவன் ஆலயம்