Showing posts with label raaja raaja cholan. Show all posts
Showing posts with label raaja raaja cholan. Show all posts

Friday, July 17, 2015

ராஜ ராஜ சோழன் - raaja raaja cholan

ராஜ ராஜ சோழன் நான் 
எனை ஆளும் காதல் தேசம் நீதான் 
பூவே காதல் தீவே 
மண்மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே 
உல்லாச பூமி இங்கு உண்டானதே 

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே 
கைதீண்டும் போது பாயும் மின்சாரமே 
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம் 
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம் 
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன் 
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன் 
உன் ராக மோகனம் என் காதல் வாகனம் 
செந்தாமரை செந்தேன்மழை என் ஆவி நீயே தேவி 

கள்ளூர பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே 
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே 
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே 
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே 
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே 
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே 
தேனோடை ஓரமே நீராடும் நேரமே 
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன்மேனி கேளாய் ராணி