Showing posts with label Naan pesa ninaipathaellaam. Show all posts
Showing posts with label Naan pesa ninaipathaellaam. Show all posts

Thursday, July 24, 2014

நான் பேச நினைப்பதெல்லாம் - Naan pesa ninaipathaellaam

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் உறவாட வேண்டும்
நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும் நீ காண வேண்டும்
நீ காணும் பொருள் யாவும் நானாக வேண்டும் நானாக வேண்டும்

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும் பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும் நானாக வேண்டும் 
மடி மீதில் விளையாடும் சேயாக வேண்டும் நீயாக வேண்டும் (நான் பேச..)

சொல்லென்றும் மொழியென்றும் பொருள்  என்றும் இல்லை பொருள்  என்றும் இல்லை 
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை 
ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே உயிர் சேர்ந்த பின்னே 
உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை வேறேதும் இல்லை (நான் பேச..)