Showing posts with label இந்த மான். Show all posts
Showing posts with label இந்த மான். Show all posts

Saturday, July 18, 2015

இந்த மான் - indha maan

இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்து தான் சிந்து பாடும் 
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே 
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே 

வேல்விழி போடும் தூண்டிலே நான் விழலானேன் கூண்டிலே 
நூலிடை தேயும் நோயிலே நான் வரம் கேட்கும் கோயிலே 
அன்னமே ....
அன்னமே எந்தன் சொர்ணமே உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே 
கன்னமே மதுக்கிண்ணமே அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே 
எண்ணமே தொல்லை பண்ணுமே பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே 

பொன்மணி மேகலை ஆடுதே உன் விழி தான் இடம் தேடுதே 
பெண் உடல் பார்த்ததும் நாணுதே இன்பத்தில் வேதனை ஆனதே 
என் அத்தான்....
என் அத்தான் உன்னை எண்ணித்தான் உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான் 
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான் என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான் 
மோகந்தான் சிந்தும் தேகந்தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான்