Showing posts with label Unnodu vaazhaatha. Show all posts
Showing posts with label Unnodu vaazhaatha. Show all posts

Saturday, September 1, 2012

உன்னோடு வாழாத - Unnodu vaazhaatha

உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது 
பூவோடு பேசாத காற்றென்ன காற்று ஒரு பூஞ்சோலை கேட்கின்றது 
மண்ணில் ஏன் ஏன் ஏன் நீயும் வந்தாய் எந்தன் பெண்மை பூப்பூக்கவே
நான் பிறக்கும் முன்னே அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும் போது நீ உந்தன் கையில் என்னை ஏந்தத்தானா

மெல்லிய ஆண்மகனை பெண்ணுக்கு பிடிக்காது முரடா உன்னை ரசித்தேன்
தொட்டதும் விழுந்துவிடும் ஆடவன் பிடிக்காது கர்வம் அதை மதித்தேன்
முடிகுத்தும் உந்தன் மார்பு என் பஞ்சு மெத்தையோ
என் உயிர் பிதுக்கும் முத்தம் அது என்ன வித்தையோ
உன்னை போலே ஆணில்லையே 
நீயும் போனால் நானில்லையே
நீரடிப்பதாலே மீன் அழுவதில்லையே 
ஆம் நமக்குள் ஊடல் இல்லை

நீயொரு தீயென்றால் நான் குளிர் காய்வேன் அன்பே தீயாய் இரு 

நீயொரு முள்ளென்றால் நான் அதில் ரோஜா அன்பே முள்ளாய் இரு 
நீ வீரமான கள்ளன் உள்ளூரும் சொல்லுது 
நீ ஈரமான பாறை என் உள்ளம் சொல்லுது
உன்னை மொத்தம் நேசிக்கிறேன்  
உந்தன் மூச்சை சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை என் மாட மாளிகை 
காதலோடு வேதமில்லை