Showing posts with label chinna chinna thooral. Show all posts
Showing posts with label chinna chinna thooral. Show all posts

Saturday, May 30, 2015

சின்ன சின்ன தூறல் - chinna chinna thooral

சின்ன சின்ன தூறல் என்ன 
என்னை கொஞ்சும் சாரல் என்ன 
சிந்த சிந்த ஆவல் பின்ன 
நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன 

உனது தூறலும் இனிய சாரலும் 
தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா 
நனைந்த பொழுதினில் குளிர்ந்த மனதினில் 
ஏதோ ஆசை துளிர்க்குதம்மா 
மனித ஜாதியின் பசியும் தாகமும் 
உன்னால் என்றும் தீருமம்மா 
வாரித்தந்த வள்ளல் என்று பாரில் உன்னை சொல்வதுண்டு 
இனமும் குலமும் இருக்கும் உலகில் 
அனைவரும் இங்கு சரிசமம் என உணர்த்திடும் மழையே -- (சின்ன சின்ன)

மழைக்கு யாவரும் தவிக்கும் நாட்களில் 
நீயோ இங்கே வருவதில்லை 
வெடித்த பூமியும் வானம் பார்க்கையில் 
நீயோ கண்ணில் தெரிவதில்லை 
உனது சேதியை பொழியும் தேதியை 
முன்னால் இங்கே யாரறிவார் 
நஞ்சை மண்ணும் புஞ்சை மண்ணும் நீயும் வந்தால் பொன்னாய் மின்னும் 
உனது பெருமை உலகம் அறியும் 
இடியெனும் இசை முழங்கிட வரும் மழையெனும் மகளே -- (சின்ன சின்ன)