Showing posts with label kalyaana maalai. Show all posts
Showing posts with label kalyaana maalai. Show all posts

Tuesday, July 14, 2015

கல்யாண மாலை - kalyaana maalai

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே 
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் 
ஸ்ருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே 

வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதது 
மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது 
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே 
மடி மீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே 
நல்ல மனையாளின் நேசமொரு கோடி 
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோழி 

கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து பாடென்றுசொன்னால் பாடதம்மா 
சோலை மயில் தன்னை சிறைவைத்து பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா 
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே 
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே 
துக்கம் சில  நேரம் பொங்கி வரும்போதும் மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே 
என் சோகம் என்னோடுதான்