Showing posts with label Naanamo innum naanamo. Show all posts
Showing posts with label Naanamo innum naanamo. Show all posts

Saturday, April 20, 2013

நாணமோ இன்னும் நாணமோ - Naanamo innum naanamo

நாணமோ இன்னும் நாணமோ 
இந்த ஜாடை நாடகம் என்ன
அந்த பார்வை கூறுவதென்ன 
நாணமோ நாணமோ

நாணுமோ இன்னும் நாணுமோ 

தன்னை நாடும் காதலர் முன்னே
திருநாளை தேடிடும் பெண்மை
நாணுமோ நாணுமோ

தோட்டத்து பூவினில் இல்லாதது

ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது
ஆடையில் ஆடுது வாடையில் வாடுது ஆனந்த வெள்ளத்தில் நீராடுது
அது எது

ஆடவர் கண்களில் காணாதது

அது காலங்கள் மாறினும் மாறாதது
காதலன் பெண்ணிடம் தேடுவதுகாதலி கண்களை மூடுவது
அது எது

மாலையில் காற்றினில் உண்டாவது

அது மஞ்சத்திலேமலர் செண்டாவது
கானலில் நீரினில் ஆடிடும் வேளையில் காதலி எண்ணத்தில் தேனாவது
அது எது

உண்டால் மயக்கும் கள்ளாவது

அது உண்ணாத நெஞ்சுக்கு முள்ளாவது
நாளுக்கு நாள் மனம் நாடுவது ஞானியின் கண்களும் தேடுவது
அது எது