Showing posts with label நிலா காயும் நேரம். Show all posts
Showing posts with label நிலா காயும் நேரம். Show all posts

Friday, July 17, 2015

நிலா காயும் நேரம் - nila kaayum neram

நிலா காயும் நேரம் சரணம் 
உலாப்போக நீயும் வரணும் 
பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திட காண்பவை யாவுமே தேன் 
அன்பே நீயே அழகின் அமுதே 

தென்றல் தேரில் நான் தான் போகும் நேரம் பார்த்து 
தேவர் கூட்டம் பூத்தூவி பாடும் நல்ல வாழ்த்து 
கண்கள் மூடி நான் தூங்க திங்கள் வந்து தாலாட்டும் 
காலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும் 
நினைத்தால் இது போல் ஆகாததேது 
அணைத்தால் உனைத்தான் நீங்காது பூ மாது 
நெடு நாள் திருத்தோள்எங்கும் நீ கொஞ்ச 

அன்பே நீயே அழகின் அமுதே - (2)

மின்னல் நெய்த சேலை மேனி மீது ஆட 
மிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட 
அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும் 
அங்கம் யாவும் நீ மூட ஆசை தந்த நோய் போதும் 
நடக்கும் தினமும் ஆனந்த யாகம் 
சிலிர்க்கும் அடடா ஸ்ரீதேவி பூந்தேகம் 
அனைத்தும் வழங்கும் காதல் வைபோகம்