Showing posts with label வசீகரா என் நெஞ்சினிக்க. Show all posts
Showing posts with label வசீகரா என் நெஞ்சினிக்க. Show all posts

Thursday, July 16, 2015

வசீகரா என் நெஞ்சினிக்க - vaseegara en nenjinikka

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன்மடியில் தூங்கினால் போதும் 
அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் 
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே 
ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான் 

அடைமழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம் 
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய் 
அது தெரிந்தும் கூட அன்பே 
மனம் அதையே தான் எதிர்பார்க்கும் 
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும் 
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் 

தினமும் நீ குளித்ததும் எனைத்தேடி 
என் சேலை நுனியால் உந்தன் 
தலைதுடைப்பாயே அது கவிதை 
திருடன் போல் பதுங்கியே திடீரென்று 
பின்னாலிருந்து என்னை 
நீ அணைப்பாயே அது கவிதை 
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்ல கூட தெரியாதே 
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே