Showing posts with label Oru vetkam varudhe. Show all posts
Showing posts with label Oru vetkam varudhe. Show all posts

Saturday, September 15, 2012

ஒரு வெட்கம் வருதே - Oru vetkam varudhe

ஒரு வெட்கம் வருதே வருதே சிறு அச்சம் தருதே தருதே 
மனமின்று அலைபாயுதே 
இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே 

போகச்சொல்லி கால்கள் தள்ள நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள 
இது முதல் அனுபவமே இனி இது தொடர்ந்திடுமே 
இது தரும் தரும் தடுமாற்றம் சுகம் 

மழை இன்று வருமா வருமா குளிர் கொஞ்சம் தருமா தருமா 
கனவென்னை களவாடுதே 
இது என்ன முதலா முடிவா இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே 

கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம் கூறு போட்டு கொல்லும் இன்பம் 
பட பட படவேனவே துடி துடித்திடும் மனமே 
வர வர வர கரை தாண்டிடுமே

மேலும் சில முறை உன் குறும்பிலே நானே தோற்கிறேன் 
உன் மடியிலே என் தலையணை இருந்தால் உறங்குவேன்
ஆணின் மனதிற்குள்ளும் பெண்மை இருக்கிறதே
தூங்க வைத்திடவே நெஞ்சம் துடிக்கிறதே  
ஒரு வரி நீ சொல்ல ஒரு வரி நான் சொல்ல
எழுதிடும் காதல் காவியம் அனைவரும் கேட்கும் நாள் வரும் 

காற்றில் கலந்து நீ என் முகத்திலே ஏனோ மோதினாய் 
பூ மரங்களில் நீ இருப்பதால் என் மேல் உதிர்கிறாய்
தூது அனுப்பிடவே நேரம் எனக்கில்லையே 
நினைத்த பொழுதினிலே வரணும் எதிரினிலே 
வெயிலிலே ஊர்கோலம் இதுவரை நாம் போனோம் 
நிகழ்கிறதே கார்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே