Showing posts with label அதோ அந்த பறவை. Show all posts
Showing posts with label அதோ அந்த பறவை. Show all posts

Wednesday, June 17, 2015

அதோ அந்த பறவை - adho andha paravai

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் 
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே 
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே 
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே 
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே 
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே -- (ஒரே வானிலே)

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே 
சொல்லிலாமல் மொழியில்லாமல் பேசவில்லையே 
வாழும்போது பசியிலாமல் வாழவில்லையே 
போகும் போது வேறு பாதை போகவில்லையே -- (ஒரே வானிலே)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை 
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை 
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை 
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை -- (ஒரே வானிலே)