Showing posts with label Allah un aanaipadi. Show all posts
Showing posts with label Allah un aanaipadi. Show all posts

Friday, August 26, 2011

அல்லா உன் ஆணைப்படி - Allah un aanaippadi

அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓர் நன்மை பிறக்கும்
உயிர் காதல் இன்று உண்டானது இரு ஜீவன் ஒன்று என்றானது 
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட 

காதலுக்கு உண்டு கல்யாண ராசி சேர்த்து வைக்கும் நம்மை அல்லாவின் ஆசி 
வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம் ஓடி வந்தேன் இனி நீதான் என் தேகம் 
நீ நீங்கி இருந்தால் சோலைவனம் பாலை ஆகும் எனக்கு 
நீ கூட நடந்தால் வேறு ஒரு சொர்க்கம் இங்கே எதற்கு 
உன்னை நான் என்னை நீ காணும் போது கண்கள் கல்யாண பண் பாடுமே 

பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக 
மாலையுடன் திருமாங்கல்யம் சூடி கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி 
கேள் காது குளிர காதல் எனும் கீதை நாளும் படிப்பேன் 
நான் காலம் முழுதும் கண்ணன் தொடும் ராதை போல இருப்பேன் 
அம்மம்மா கண்ணம்மா ஆசை என்னும் மழை ஓயாது ஓயாதம்மா