Showing posts with label Athikaai kaai kaai. Show all posts
Showing posts with label Athikaai kaai kaai. Show all posts

Saturday, September 1, 2012

அத்திக்காய் காய் - Athikaai kaai

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே 
இத்திக்காய் காயாதே என்னை போல் பெண்ணல்லவோ 
நீ என்னைப் போல் பெண்ணல்லவோ 

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே 
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ 
என்னுயிரும் நீயல்லவோ 

கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவக்காய் 
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய் 
மாதுளங்காய் ஆனாலும் என்னுளங்காய் ஆகுமோ 
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ 
இத்திக்காய் காயாதே என்னை போல் பெண்ணல்லவோ 

இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய் 
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளைக் காய் 
உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ 

ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளும் வாழக்காய் 
ஜாதிக்காய் கேட்டது போல் தனிமை இன்பம் கனியக்காய் 
சொன்னதெல்லாம் விளங்காயோ தூது வழங்காய் வெண்ணிலா  
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ 

உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர் சுரைக்காயோ 
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரித்தாயோ 
கொதைஎணன் காயாதே கொற்றவரைக்காய் வெண்ணிலா 
இருவரையும் காயாதே தனிமையில் ஏங்கே வெண்ணிலா