Showing posts with label Un paarvayil oraayiram. Show all posts
Showing posts with label Un paarvayil oraayiram. Show all posts

Friday, July 18, 2014

உன் பார்வையில் ஓராயிரம் - Un paarvayil oraayiram

உன் பார்வையில் ஓராயிரம்  கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன் நினைவினாலே அணைக்கிறேன்


அசைத்து இசைத்தது வளைக்கரம் தான் 
இசைந்து இசைத்தது புது ஸ்வரம் தான் 
சிரித்த சிரிப்பொலி சிலம்பொலி தான்
கழுத்தில் இருப்பது வலம்புரிதான் 

இருக்கும் வரைக்கும் எடுத்துக் கொடுக்கும் 
மனதை மயிலிடம் இழந்தேனே 
மயங்கி தினம் தினம் விழுந்தேனே 
மறந்து இருந்து பறந்து தினம் மகிழ (உன் பார்வையில்...)

அணைத்து நனைந்தது தலையணை தான்
அடுத்த அடி என்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத் தான்
இடுப்பை வளைத்துனை அணைத்திடத்தான்

நினைக்க மறந்தால் தனித்து பறந்தேன் 
மறைத்த முகத்திரை திறப்பாயோ 
திறந்து அகச்சிறை இருப்பாயோ 
இருந்து விருந்து  மனம் இணைய (உன் பார்வையில்...)