Showing posts with label Oru Poongavanam. Show all posts
Showing posts with label Oru Poongavanam. Show all posts

Saturday, September 1, 2012

ஒரு பூங்காவனம் - Oru poongaavanam

ஒரு பூங்காவனம் புது மனம் 
அதில் ரோமாஞ்சனம் தினம் தினம் 
உலாவரும் கனாக்கள் கண்ணிலே 
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே 

நான் காலை நேரத் தாமரை 
என் கானம் யாவும் தேன் மழை 
நான் கால் நடக்கும் தேவதை 
என் கோயில் இந்த மாளிகை 
எந்நாளும் தென்றல் வந்து வீசிடும் 
என்னோடு தோழி போல பேசிடும் 

உலாவரும் கனாக்கள் கண்ணிலே 
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே 

நான் வானவில்லை வேண்டினால்
ஓர் விலை கொடுத்து வாங்குவேன் 
வெண் மேகக்கூட்டம் யாவையும் 
என் மெத்தையாக்கித் தூங்குவேன் 
சந்தோஷப்பூக்கள் எந்தன் சோலையில் 
சங்கீதம் பாடும் அந்தி மாலையில்  

உலாவரும் கனாக்கள் கண்ணிலே 
ஓராயிரம் வினாக்கள் நெஞ்சிலே