Showing posts with label Neethaane naalthorum. Show all posts
Showing posts with label Neethaane naalthorum. Show all posts

Saturday, September 1, 2012

நீதானே நாள்தோறும் - Neethaane naalthorum

நீதானே நாள்தோறும் நான் பாடக் காரணம் 
நீ எந்தன் நெஞ்சோடு நின்றாடும் தோரணம் 
நீயின்றி நான் பாட வேறேது கீர்த்தனம் 

உறவு ராகம் இதுவோ 
இன்று உதயமாகி வருதோ 
உனது தாகம் விளைய 
இது அடிமையான மனதோ 

ஊற்று போலவே பாட்டு வந்ததே உன்னைக் கண்டதாலே 
பாவை என்னையே பாட வைத்ததே அன்பு  கொண்டதாலே  
உன்னைப் பார்க்கையில் என்னை பார்க்கிறேன் உந்தன் காந்தக் கண்ணில் 
நன்றி சொல்லியே என்னை சேர்க்கிறேன் இன்று உந்தன் கையில் 
எந்தன் ஆவல் தீருமோ உந்தன் பாத பூஜையில் 
இந்த ஜீவன் தூபமோ உந்தன் நாத வேள்வியில் 
எண்ணம் நீ வண்ணம் நீ 
இங்கு நீ எங்கும் நீ 
வேதம் போலே உந்தன் பேரை ஓதும் உள்ளம் தான் 

நாத வெள்ளமும் கீத வெள்ளமும் வாரித்தந்தது நீ 
நாளும் என்னையே வாழவைக்கவே வாசல் வந்தது நீ 
வீணை தன்னையே கையில் ஏந்திடும் ஞானவல்லியே நீ   
வெள்ளைத்தாமரை பூவில் மேவியே ஆளும் செல்வியே நீ 
எந்தன் வாக்கு மேடையில் நின்று ஆடும் வாணியே 
எந்த நாளும் மேன்மையில் என்னை ஏற்றும் மேனியே 
அன்னை நீ அல்லவா 
இன்னும் நான் சொல்லவா 
நீ தான் தெய்வம் நீ தான் செல்வம் கீதம் சங்கீதம்