Showing posts with label Thendral thaan thingal thaan. Show all posts
Showing posts with label Thendral thaan thingal thaan. Show all posts

Friday, July 18, 2014

தென்றல் தான் திங்கள் தான் - Thendral thaan thingal thaan

தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும் 
உன்னில் தான் என்னில் தான்  காதல் சந்தம் 
ஆடும் காற்று  நெஞ்சில் தாளம் போட ஆசை ஊற்று காதில் கானம் பாட 
நெஞ்சோடு தான் வா வா வா கூட 

காவேரி ஆற்றின் மீனிங்கே காதோடு மோதும் ஆனந்தம்
தீராத காதல் தேனிங்கே பாட்டோடு பாட்டாய் ஆரம்பம் 
பாராமலே போராடினேன் தாளாத மோகம் ஏற 
தூங்காமலே நான் வாடினேன் சேராத தோள் தான் சேர 
தாவிடும் என் நெஞ்சத்தின் சந்தங்கள் பாடிடும் உன்னை 
தேடிடும் உன் நெஞ்சத்தின் மஞ்சத்தில்  பாய்ந்திடும் என் எண்ணங்கள் 
நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட  (தென்றல் தான் திங்கள்...)

பூ மீது மோதும் தென்றல் தான் பூமேனி சேர்ந்தால் தாங்காது 
பூவாடை மூடும் ஜாலத்தால் பூபாளம் தானாய் தோன்றாது 
நூலாடையின் மேலாடவும் தேகம் தான் தீயாய் மாறும் 
தேனோடையில் நீராடவும் மோகந்தான் மேலும் ஏறும் 
தேடிடும் என் ராஜாவின் ரோஜாப்பூ சேர்ந்திடும் உன்னை 
கேளடி என் ராஜாங்கம் நீதானே சேரடி என் மன்றத்தில் 
நித்தம் நீ தித்தித்தாய் பக்கம் தான் வா வா வா கூட  (தென்றல் தான் திங்கள்...)