Showing posts with label Andhiyile vaanam. Show all posts
Showing posts with label Andhiyile vaanam. Show all posts

Thursday, August 18, 2011

அந்தியிலே வானம் - Andhiyile vaanam

அந்தியிலே வானம் தந்தனத்தோம் போடும் அலையோட சிந்து படிக்கும்
சந்திரரே  வாரும்  சுந்தரிய  பாரும்  சதிராட்டம்  சொல்லி கொடுக்கும்
ஓடும்  காவிரி  இவதான்  என்  காதலி  
குளிர்  காய தேடி  தேடி கொஞ்ச  துடிக்கும்

கட்டமர தோணி போல 
கட்டழகன் உங்க மேல சாஞ்சா சந்தோசம் உண்டல்லோ
பட்டுடுத்த தேவையில்ல 
முத்துமணி ஆசையில்ல பாசம் நெஞ்சோடு உண்டல்லோ
பாலூட்டும் சங்கு அது தேனூட்டும் இங்கு 
பாலாறும் தேனாறும் தாலாட்டும் பொழுது 
பாய்மேல நீ போடு தூங்காத விருந்து 
நாளும்  உண்டல்லோ அத நானும் கண்டல்லோ 
இது நானும் நீயும் பாடும் பாட்டல்லோ

வெள்ளியல தாளந்தட்ட 
சொல்லியொரு மேளங்கோட்ட வேளை வந்தாச்சு கண்ணம்மா 
மல்லியப்பூ மாலை கட்ட 
மாரியிட வேளை கிட்ட மஞ்சம் போட்டாச்சு பொன்னம்மா
கடலோரம் காத்து ஒரு கவி பாடும் பாத்து 
காணாம நூலானேன் ஆளான நான்தான் 
தோளோடு நான் சேர ஊறாதோ தேன்தான்  
தேகம் ரெண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ 
இரு தேகம் ஒன்று  ஜீவன் என்று கூடும்  இன்றல்லோ