Showing posts with label chinna manikuyile. Show all posts
Showing posts with label chinna manikuyile. Show all posts

Saturday, June 13, 2015

சின்ன மணிக்குயிலே - chinna manikuyile

சின்ன மணிக்குயிலே மெல்ல வரும் மயிலே 
எங்கே உன் ஜோடி நான் போறேன் தேடி 
எங்கே உன் ஜோடி இல்லாம கேட்டாக்க பதிலும் சொல்லாம
குக்கூ என கூவுவதேனடி கண்மணி கண்மணி 
பதில் சொல்லு நீ சொல்லு நீ

நில்லாத வைகையிலே நீராட போகையிலே 
சொல்லாத சைகியிலே நீ ஜாடை செய்கையிலே
கல்லாகி போனேன் நானும் கண் பார்த்தா ஆளாவேன் 
கைசேரும் காலம் வந்தா தோளோடு தோளாவேன் 
உள்ள கனத்ததடி ராகம் பாடி நாளும் தேடி நீ அடிக்கடி அணைக்கணும் 
கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ

பட்டுத் துணி உடுத்தி உச்சி முடி திருத்தி 
எட்டு அடி எடுத்து எட்டி நடந்த புள்ளை 
உன் சேலை காத்தில் ஆட என் நெஞ்சும் சேர்ந்தாட 
உன் கூந்தல் வாசம் பாத்து என் எண்ணம் கூத்தாட 
மாராப்பு சேலையிலே நூலைப்போல நானிருக்க நான் சாமிய வேண்டுறேன் 
கண்மணி கண்மணி பதில் சொல்லு நீ சொல்லு நீ