Showing posts with label oru naal podhuma. Show all posts
Showing posts with label oru naal podhuma. Show all posts

Wednesday, July 8, 2015

ஒரு நாள் போதுமா - Oru naal podhuma

ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா
புது நாதமா சங்கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா 

ராகமா சுக ராகமா
கானமா தேவ கானமா
என் கலைகிந்த திரு நாடு சமமாகுமா
என் கலைகிந்த திரு நாடு சமமாகுமா
நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா

குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
அழியாத கலையென்று எனை பாடுவார்
எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ 
எழுந்தோடி வருவாரன்றோ...எழுந்தோடி...தோடி...இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ 
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் எவரும் உண்டோ....தர்பாரில் எவரும் உண்டோ....
எனக்கிணையாக  தர்பாரில் எவரும் உண்டோ 
கலையாத மோகன சுவை நானன்றோ மோகன சுவை நானன்றோ 
மோகனம்....
கலையாத மோகன சுவை நானன்றோ
கானடா ஆ .....என் பாட்டு தேனடா 
இசை தெய்வம் நானடா