Showing posts with label adho mega oorvalam. Show all posts
Showing posts with label adho mega oorvalam. Show all posts

Saturday, May 30, 2015

அதோ மேக ஊர்வலம் - adho mega oorvalam

அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே
இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உத்சவம் இங்கே
ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன்
இதோ நான் உயிரினில் உன்னை சேர்த்தேன் வா

உனது பாதம் அடடடா இலவம் பஞ்சு
நடக்கும் பொது துடித்தது எனது நெஞ்சு 
இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம் 
நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம் 
தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே 
ஆடை என்ன வேண்டுமா 
நாணம் என்ன வா வா  -- (அதோ மேக ஊர்வலம்)

குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும் 
முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும் 
தென்னம்பாண்டி முத்தைப்போல் தேவி புன்னகை
வந்து ஆடச் சொல்லுமே சிந்து மல்லிகை
உன்னை செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான் 
காதல் பிச்சை வாங்குவான் 
இன்னும் என்ன சொல்ல -- (அதோ மேக ஊர்வலம்)