Showing posts with label aagaya vaennilaave. Show all posts
Showing posts with label aagaya vaennilaave. Show all posts

Saturday, May 30, 2015

ஆகாய வெண்ணிலாவே - aagaya vaennilaave

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ 
அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ 
மலர் சூடும் கூந்தலே மழைக்கால மேகமாய் கூட 
உறவாடும் விழிகளே இரு வெள்ளி மீன்களாய் ஆட 

தேவார சந்தம் கொண்டு தினம் பாடும் தென்றல் ஒன்று 
பூவாரம் சூடிக்கொண்டு தலைவாசல் வந்ததின்று 
தென்பாண்டி மன்னன் என்று திருமேனி வண்ணம் கண்டு 
மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று 
இளநீரு பாலும் தேனும் இதழோரம் வாங்க வேண்டும் 
கொடுத்தாலும் காதல் தாபம் குறையாமல் ஏங்க வேண்டும் 
கடல் போன்ற ஆசையில் மடல் வாழை மேனிதான் ஆட 
நடுஜாம வேளையில் நெடு நேரம் நெஞ்சமே கூட -- (ஆகாய வெண்ணிலாவே...)


தேவாதி தேவர் கூட்டம் துதி பாடும் தெய்வரூபம் 
ஆதாதிகேசம் எங்கும் ஒளி வீசும் கோவில் தீபம் 
பாடாத பாரிஜாதம் நடைபோடும் வண்ண பாதம் 
கேளாத வேணுகானம் கிளிப்பேச்சில் கேட்கக்கூடும் 
அடியாளின் ஜீவன் மேவி அதிகாரம் செய்வதென்ன 
அலங்கார தேவ தேவி அவதாரம் செய்ததென்ன 
இசைவீணை வாடுதோ இதமான கைகளே மீட்ட 
ஸ்ருதியோடு சேருமோ சுகமான ராகமே காட்ட -- (ஆகாய வெண்ணிலாவே...)