Showing posts with label Oru dheiyvam thantha poove. Show all posts
Showing posts with label Oru dheiyvam thantha poove. Show all posts

Friday, June 14, 2013

ஒரு தெய்வம் தந்த பூவே - Oru dheiyvam thantha poove

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்
காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே

கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே வானம் முடியும் இடம் நீதானே
காற்றைப் போல நீ வந்தாயே ஸ்வாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊரும் உயிரே

எனது சொந்தம் நீ எனது பகையும் நீ

காதல் மலரும் நீ கருவில் முள்ளும் நீ
செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ (2)
பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ (2)
மரணம் ஈன்ற ஜனனம் நீ -- (ஒரு தெய்வம்)

எனது செல்வம் நீ எனது வறுமை நீ

இழைத்த கவிதை நீ எழுத்து பிழையும் நீ
இரவல் வெளிச்சம் நீ இரவின் கண்ணீர் நீ (2)
எனது வானம் நீ இழந்த சிறகும் நீ (2)
நான் தூக்கி வளர்த்த துயரம் நீ -- (ஒரு தெய்வம்)