Tuesday, June 30, 2015

காதலிக்கும் பெண்ணின் கைகள் - kaadhalikkum pennin kaigal

காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால் 
சின்ன தகரம் கூட தங்கம் தானே 
காதலிக்கும் பெண்ணின் வண்ண கன்னம் ரெண்டிலே 
மின்னும் பருவும் கூட பவளம் தானே

சிந்தும் வேர்வை தீர்த்தமாகும் 
சின்ன பார்வை மோட்சம் ஆகும் 
காதலின் சங்கீதமே ம்ம்ம்..பூமியின் பூபாளமே 

காதலிக்கும் பெண் வடிக்கும் கையெழுத்திலே 
கண்ட பிழைகள் கூட கவிதையாகுமே 
காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே  
எச்சில் கூட புனிதமாகுமே
குண்டு மல்லி ரெண்டு ரூபாய் 
உன் கூந்தல் ஏறி உதிரும் பூ கோடி ரூபாய் 
பஞ்சு மிட்டாய் அஞ்சு ரூபாய் 
நீ பாதி தின்று தந்ததால் லட்ச ரூபாய்

காதல் ஒன்றும் நல்ல நேரம் பார்ப்பதில்லையே 
ராகு காலம் கூட ராசியாகுமே 
காதலுக்கு அன்னபட்சி தேவையில்லேயே 
காக்கை கூட தூது போகுமே
காதல் ஜோதி புகைவதில்லை 
காதல் என்றும் சுற்றமே பார்ப்பதில்லை 
இதில் அற்பமானதோ எதுவும் இல்லை 
இந்த நுட்பம் உனக்கு புரியவில்லை 

வானும் மண்ணும் மாறியே போகும் 
காதல் என்றும் வாழுமே 
ஆதாம் ஏவாள் பாடிய பாடல் காற்றில் என்றும் கேட்குமே 
காதல் கெட்ட வார்த்தையா என்ன யாரும் சொல்லலாம் 
நீ சொல்ல வேண்டும் இன்று 
காதல் முள்ளில் வேலியா என்ன யாரும் செல்லலாம் 
நீ செல்ல வேண்டும் இன்று

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் - brindavanamum nandakumaranum

பிருந்தாவனமும் நந்தகுமாரனும் 
யாவருக்கும் பொது செல்வமன்றோ 
ஏனோ ராதா இந்த பொறாமை 
யார்தான் அழகால் மயங்காதவரோ 

புல்லாங்குழலிசை இனிமையினாலே 
உள்ளமே ஜில்லென துள்ளாதா 
ராகத்திலே அனுராகமவினால் 
ஜகமே ஊஞ்சலில் ஆடாதா 

கண்ணனின் உன்னத லீலையை நினைத்தால் 
தன்னையே மறந்திட செய்யாதா 
ஏனோ ராதா இந்த பொறாமை 
யார்தான் அழகால் மயங்காதவரோ

செந்தாழம் பூவில் - senthaazham poovil

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா 
பூவாசம் மேடை போடுதம்மா பெண் போல ஜாடை பேசுதம்மா 
அம்மம்மா ஆனந்தம் அம்மம்மா ஆனந்தம் 

வளைந்து நெளிந்து போகும் பாதை மங்கை மோக கூந்தலோ 
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ 
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது 
ஆசை குயில் பாஷையின்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள் 
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள் 
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன் 
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை 
இதழை வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை 
ஓடை தரும் வாடைக்காற்று வான் உலகை காட்டுது 
உள்ளே வரும் வெள்ளமொன்று ஏங்கோ என்னை கூட்டுது 
மறவேன் மறவேன் அற்புத காட்சி

சங்கீத ஜாதி முல்லை - sangeetha jaathi mullai

சங்கீத ஜாதி முல்லை காணவில்லை 
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வை இல்லை 
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை 
சாவொன்று தானா நம் காதல் எல்லை 
என் நாதமே வா....

திருமுகம் வந்து பழகுமோ 
அறிமுகம் செய்து விலகுமோ 
விழிகளில் துளிகள் வடியுமோ - அது 
சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி 
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது 
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது 
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி 
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசையெனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும் 
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ 

ராஜ தீபமே எந்தன் வாசலில் வாராயோ 
குயிலே...குயிலே...குயிலே...குயிலே...
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும் 
ராஜ தீபமே....
நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே 
மன கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே 
விழியில்லை எனும் போது வழி கொடுத்தாய் 
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய் 
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் 
சிந்தும் சந்தம் உந்தன் சொந்தம் 
தத்திச் செல்லும் முத்து சிற்பம் 
கண்ணுக்குள்ளே கண்ணீர்  வெப்பம் 
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ 
கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன...ராஜ தீபமே....

ஏழு ஸ்வரங்களுக்குள் - yezhu swarangalukkul

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் 
இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி 
காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்

காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது 

கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி 
ஏன் என்ற கேள்வி ஒன்று என்றைக்கும் தங்கும் - மனிதன் 
இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும் 

எனக்காக நீ அழுதால் இயற்கையில் நடக்கும் 
நீ எனக்காக உணவு உண்டு எப்படி நடக்கும் 
நமக்கென்று பூமியிலே கடமைகள் உண்டு - அதை
நமக்காக நம் கையால் செய்வது நன்று

ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை - என்றும் 
அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை 
பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் 
அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம் 

நாளை பொழுது என்றும் நமக்கென வாழ்க - அதை 
நடத்த ஒருவன் உண்டு கோவிலில் காண்க 
வேளை பிறக்கும் என்று நம்பிக்கை கொள்க - எந்த 
வேதனையும் மாறும் மேகத்தை போல 

வான் மேகம் - vaan megam

வான் மேகம் பூப்பூவாய் தூவும் 
தேகம் என்னவாகும் 
இன்பமாக நோகும் 
மழைத்துளி தெரித்தது எனக்குள்ளே குளிர்த்தது 
நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது 
வானம் முத்துக்கள் சிந்தி வாழ்கவென்றது 
காதல் வென்றது 
மேகம் வந்தது 
பூக்கள் சிந்துது 
ஆளுமில்லை சேர்த்தெடுக்க நூலுமில்லை கோர்த்தெடுக்க 

வானிலே வானிலே நீரின் தோரணங்களோ 
என் மனம் பொங்குதே என்ன காரணங்களோ 
அவன் விழி அசைத்ததில் இவள் மனம் அசைந்ததோ 
தளிர்க்கரம் பிடிக்கையில் மலர்க்கொடி சிலிர்த்ததோ 
சாலை எங்கும் இங்கே சங்கீத மேடை ஆனதோ 
பாடல் பாடுதோ தூறல் போடுதோ தோகை ஆடுதோ
பூமி எங்கும் கவியரங்கம் சாரல் பாடும் ஜலதரங்கம்

வா வா அன்பே அன்பே - vaa vaa anbe anbe

வா வா அன்பே அன்பே 
காதல் நெஞ்சே நெஞ்சே
உன் வண்ணம் உன் எண்ணம்
எல்லாமே என் சொந்தம் 
இதயம் முழுதும் எனது வசம்

நீலம் கொண்ட கண்ணும் நேசம் கொண்ட நெஞ்சும் 
காலம் தோறும் என்னை சேரும் கண்மணி 
பூவை இங்கு சூடும் பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை கூறும் பொன்மணி 
காலை மாலை ராத்திரி காதல் கொண்ட பூங்கொடி 
ஆணை போடலாம் அதில் நீயும் ஆடலாம் 
நீ வாழத்தானே வாழ்கின்றேன் நானே 
நீயின்றி ஏது பூவைத்த மானே 
இதயம் முழுதும் எனது வசம் 

கண்ணன் வந்து துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம் 
காதல் அல்ல காதல் என்னும் காவியம் 
அன்றும் இன்றும் என்றும் உந்தன் கையில் தஞ்சம் 
பாவை அல்ல பார்வை பேசும் ஓவியம்
காற்றில் வாங்கும் மூச்சிலும் கன்னி பேசும் பேச்சிலும் 
நெஞ்சமானது உந்தன் தஞ்சமானது 
உன் தோளில் தானே பூமாலை நானே 
சூடாமல் போனால் வாடாதோ மானே
இதயம் முழுதும் எனது வசம்

வண்ணம் கொண்ட வெண்ணிலவே - vannam konda vaennilave

வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ 
விண்ணிலே பாதை இல்லை உன்னை தொட ஏணி இல்லை 

பக்கத்தில் நீயும் இல்லை பார்வையில் ஈரமில்லை 
சொந்தத்தில் பாஷை இல்லை சுவாசிக்க ஆசை இல்லை
கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கும் ஞானம் இல்லை 
நீலத்தை பிரித்து விட்டால் வானத்தில் ஏதும் இல்லை 
தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள வாழ்க்கை இல்லை

நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன் 
நங்கை வந்து சேரவில்லை நட்சத்திரம் வாடுதடி 
கன்னி உன்னை பார்த்திருப்பேன் கால்கடுக்க காத்திருப்பேன் 
ஜீவன் சேரும் வரை தேகம் போல் நான் கிடப்பேன் 
தேவி வந்து சேர்ந்துவிட்டால் ஆவி கொண்டு நான் நடப்பேன் 

வெள்ளை புறா ஒன்று - vellai pura ondru (patho)

வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே 
முதலெழுத்து தாய்மொழியில் தலையெழுத்து யார் மொழியில் 
என் வாழ்க்கை வான்வெளியில் 

பாதச்சுவடு தேடி தேடி கால்கள் ஓய்ந்து போனதே 
நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழை ஆனதே 
தலைவிதி என்னும் வார்த்தை இன்று கவலைக்கு மருந்தானதே
வேதங்களே வாழும் வரை சோகங்களே காதல் கதை 
கார்கால மலர்களும் என்னோடு தள்ளாடும் 

நீயும் நானும் சேர்ந்த போது கோடை கூட மார்கழி 
பிரிந்த பின்பு பூவும் என்னை சுடுவதென்ன காதலி 
துடுப்பிழந்ததும் காதல் ஓடம் திசை மறந்தது பைங்கிளி
போகும் வழி நூறானதே கண்ணீரினால் சேரானதே 
இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம் 


வெள்ளை புறா ஒன்று - vellai pura ondru (duet)

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
நமது கதை புதுக்கவிதை இலக்கணங்கள் இதற்கு இல்லை
நானுந்தன் பூமாலை

கங்கை வெள்ளம் பாயும் போது கரைகள் என்ன வேலியோ 
பாவியோடு சேர்ந்த ஜோதி பாதை மாறக்கூடுமோ 
மனங்களின் நிறம் பார்த்த காதல் முகங்களின் நிறம் பார்க்குமோ 
நீ கொண்டு வா காதல் வரம் பூத்தூவுமே பன்னீர் மரம் 
சூடான கனவுகள் தன்னோடு தள்ளாட

பூவில் சேர்ந்து வாழ்ந்த வாசம் காவல் தனை மீறுமே 
காலம் மாறும் என்ற போதும் காதல் நதி ஊறுமே 
வரையறைகளை மாற்றும் போது தலைமுறைகளும் மாறுமே 
என்றும் உந்தன் நெஞ்ஜோரமே அன்பே உந்தன் சஞ்சாரமே 
கார்கால சிலிர்ப்புகள் கண்ணோரம் உண்டாக

Friday, June 26, 2015

ஊர்வசி ஊர்வசி - urvasi urvasi

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி 
ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல பார்மசி 
வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி ஊர்வசி
வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பான்டசி 


பேசடி ரதியே ரதியே தமிழில் வார்த்தைகள் மூன்று லட்சம் 
நீயடி கதியே கதியே ரெண்டு சொல்லடி குறைந்தபட்சம்

ஒளியும் ஒலியும் கரண்டு போனா டேக் இட் ஈசி பாலிசி
ஒழுங்கா படிச்சும் பைலா போனா டேக் இட் ஈசி பாலிசி
தண்டசொருனு அப்பன் சொன்னா டேக் இட் ஈசி பாலிசி
வழுக்க தலையன் திருப்பதி போனா டேக் இட் ஈசி பாலிசி

கேளடி ரதியே ரதியே உடம்பில் நரம்புகள் ஆறு லட்சம் 
தெரியுமா சகியே சகியே காதல் நரம்பு எந்த பக்கம் 

கண்டதும் காதல் வழியாது கண்களால் ரத்தம் வழியாது 
பூனையில் சைவம் கிடையாது ஆண்களில் ராமன் கிடையாது 
புரட்சிகள் ஏதும் செய்யாமல் பெண்ணுக்கு நன்மை விளையாது 
கண்ணகி சிலை தான் இங்குண்டு சீதைக்கு தனியாய் சிலயேது 

பிலிம் காட்டி பொண்ணு பாக்கலேன்னா டேக் இட் ஈசி பாலிசி 
பக்கத்து சீட்டுல பாட்டி ஒக்காந்தா டேக் இட் ஈசி பாலிசி
பண்டிகை தேதி சண்டையில் வந்தா டேக் இட் ஈசி பாலிசி
அழுத காதலி அண்ணானு சொன்னா டேக் இட் ஈசி பாலிசி 

பகலிலே கலர்கள் பாராமல் இருட்டிலே கண்ணடித்தென்ன பயன் 
சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் என்ன பயன் 
பிகருகள் யாரும் இல்லாமல் வகுப்புகள் இருந்தும் என்ன பயன்
இருபது வயதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்

Wednesday, June 17, 2015

அழகிய மிதிலை - azhagiya mithilai

அழகிய மிதிலை நகரினிலே யாருக்கு ஜானகி காத்திருந்தாள்
பழகிடும் ராமன் வரவை எண்ணி பாதையை அவள் பார்த்திருந்தாள் 
பாதையை அவள் பார்த்திருந்தாள் 

காவிய கண்ணகி இதயத்திலே 
கனிந்தவர் யார் இளம் பருவத்திலே 
கோவலன் என்பதை ஊரறியும் 
சிறு குழந்தைகளும் அவன் பேரறியும்  -- (அழகிய மிதிலை)

பருவத்து பெண்கள் தனித்திருந்தால் 
பார்ப்பவர் மனதில் என்ன வரும் 
இளையவர் என்றால் ஆசை வரும் 
முதியவர் என்றால் பாசம் வரும் -- (அழகிய மிதிலை)

ஒருவரை ஒருவர் உணர்ந்து கொண்டால் 
உள்ளத்தை நன்றாய் புரிந்துகொண்டால் 
இருவர் என்பது மாறி விடும் 
இரண்டும் ஒன்றாய் கலந்து விடும் -- (அழகிய மிதிலை)

அவளுக்கென்ன - avalukkaenna

அவளுக்கென்ன 
அழகிய முகம் அவனுக்கென்ன 
இளகிய மனம் நிலவுக்கென்ன 
இரவினில் வரும் இரவுக்கென்ன 
உறவுகள் தரும் உறவுக்கென்ன 
உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

ஓ.... அழகு ஒரு மாஜிக் டச் 
ஓ.... ஆசை ஒரு காதல் சுவிட்ச் 
ஆயிரம் அழகியர் பார்த்துண்டு ஆனால் அவள் போல் பார்த்ததில்லை 
வா வா என்பதை விழியில் சொன்னாள் 
மௌனம் என்றொரு மொழியில் சொன்னாள்-- (அவளுக்கென்ன)

அன்பு காதலன் வந்தான் காற்றோடு 
அவள் நாணத்தை மறந்தாள் நேற்றோடு 
அவன் அள்ளி எடுத்தான் கையோடு 
அவள் துள்ளி எழுந்தாள் கனிவோடு -- (அவனுக்கென்ன)

சிற்றிடை என்பது முன்னழகு 
சிறுநடை என்பது பின்னழகு 
பூவில் பிறந்தது கண்ணழகு 
பொன்னில் விளைந்தது பெண்ணழகு -- (அவளுக்கென்ன)

அதோ அந்த பறவை - adho andha paravai

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் 
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே 
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே 
கடல் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே 
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே 
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே -- (ஒரே வானிலே)

தோன்றும் போது தாயில்லாமல் தோன்றவில்லையே 
சொல்லிலாமல் மொழியில்லாமல் பேசவில்லையே 
வாழும்போது பசியிலாமல் வாழவில்லையே 
போகும் போது வேறு பாதை போகவில்லையே -- (ஒரே வானிலே)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை 
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை 
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை 
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை -- (ஒரே வானிலே) 

அத்தை மடி மெத்தையடி - athai madi methayadi

அத்தை மடி மெத்தையடி ஆடி விளையாடம்மா 
ஆடும் வரை ஆடி விட்டு அல்லி விழி மூடம்மா

மூன்றாம் பிறையில் தொட்டில் கட்டி 
முல்லை மல்லிகை மெத்தையிட்டு
தேன் குயில் கூட்டம் பண்பாடும் 
மான்குட்டி கேட்டு கண் மூடும் 

வேறோர் தெய்வத்தை போற்றவில்லை 
வேறோர் தீபத்தை ஏற்றவில்லை  
அன்றோர் கோவிலை ஆக்கி வைத்தேன் 
அம்பிகையாய் உன்னை தூக்கி வைத்தேன்

Saturday, June 13, 2015

தவிக்கிறேன் தவிக்கிறேன் - thavikkiren thavikkiren

தவிக்கிறேன் தவிக்கிறேன் உனது கனவாலே 
துடிக்கிறேன் துடிக்கிறேன் உனது நினைவாலே 
நான் அனுப்பும் பூவாசம் 
நீ அனுப்பும் பூவாசம் என் மூச்சில் உன் மூச்சை சேர்க்கின்றதே 

வண்ணங்கள் தேவையில்லை உன்னை தொட்டு படம் தீட்டுவேன் 
அடடா அது நடந்தால் உலகம் வியந்து புகழும்
ஸ்வரம் ஏழு போதவில்லை உன் பெயரை ஸ்வரமாக்குவேன்
அடடா அது நடக்கும் உலகம் வியந்து புகழும் 
ஓடிவா ஓடிவா இயங்கவில்லை இதயத்தின் ஒரு பாதி 
தேடி வா தேடி வா இரு உயிரும் ஒன்றாகும் ஒரு தேதி
காதலே காதலே மேகத்தால் வானில் வீடு கட்டு 

முதன்முதலாய் பார்க்கும் போது என்னை என்ன செய்வாயோ நீ 
நினைத்தால் அதை நினைத்தால் மனதில் நடுக்கம் பிறக்கும் 
குலதெய்வம் நேரில் பார்க்கும் பக்தனைப் போல் நான் காணுவேன் 
ஒரு நாள் அது நடக்கும் திருநாள் என்னை அழைக்கும் 
மாற்றினாய் மாற்றினாய் சிறகு இன்றி பறக்கின்ற பூவாக 
மாறினேன் மாறினேன் உன்னை மட்டும் சுமக்கின்ற காற்றாக 
காலமே காலமே காலத்தால் அழியா வாழ்வு கொடு

புத்தம் புது காலை - putham puthu kaalai

புத்தம் புது காலை பொன் நிற வேளை 
என் வாழ்விலே தினம்தோறும் தோன்றும் 
சுகராகம் கேட்கும் 
எந்நாளும் ஆனந்தம் 

பூவில் தோன்றும் வாசம் அது தான் ராகமோ 
இளம் பூவை நெஞ்சில் தோன்றும் அது தான் தாளமோ 
மனதின் ஓசைகள் மலரின் கோலங்கள் 
குயிலோசையின் பரிபாஷைகள் அதிகாலையின் வரவேற்புகள் 

வானில் தோன்றும் கோலம் அதை யார் போட்டதோ 
பனி வாடை வீசும் காற்றில் சுகம் யார் சேர்த்தோ 
வயதில் தோன்றிடும் நினைவில் ஆனந்தம் 
வளர்ந்தாடுது இசை பாடுது வழிந்தோடிடும் சுவை கூடுது 

பூங்குயில் பாட்டு - poonguyil paatu

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா பூங்காற்றே பிடிச்சிருக்கா 
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா பனிக்காற்றே பிடிச்சிருக்கா 
சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா 
சுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா 
அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு 

ஜன்னலுக்குள்ளே வந்து கண்ணடிக்கிற அந்த வெண்ணிலவு பிடிச்சிருக்கா 
கண்கள் திறந்து தினம் காத்து கிடந்தேன் என்ன கண்டு கொள்ள மனசிருக்கா 
இளமனசுக்குள் கனவுகளை இறக்கி வெச்சது நினைப்பிருக்கா 
மேகம் போட்டு மறைச்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா 
அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு

ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி நான் ரசிச்சது பிடிச்சிருக்கா 
கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில் நாம நனைஞ்சது நினைப்பிருக்கா 
திறந்திருக்கிற மனசுக்குளே திருடி சென்றது பிடிச்சிருக்கா
வாசம் பூவும் பிடிச்சிருக்கா வாழ்ந்து பார்க்க வழியிருக்கா 
அடி கிளியே நீ சொல்லு வெள்ளி நிலவே நீ சொல்லு

பூவே செம்பூவே - poove semboove

பூவே செம்பூவே உன் வாசம் வரும் 
வாசம் உன் வாசம் என் பூங்காவனம் 
வாய்பேசிடும் புல்லாங்குழல் நீதானொரு பூவின் மடல் 
 
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம் 
கடல் வானம் கூட நிறம் மாறக்கூடும் 
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது 
நான் வாழும் வாழ்வே உனக்காக தானே 
நாள்தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே 
எந்நாளும் சங்கீதம் சந்தோஷமே 

உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே 
மலர் வந்து கொஞ்சும் கிளிப்பிள்ளை தானே 
உனைப்போல நானும் மலர் சூடும் பெண்மை 
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை 
நான் செய்த பாவம் என்னோடு போகும் 
நீ வாழ்ந்து நான் தான் பார்த்தாலே போதும் 
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே

நின்னுகோரி வர்ணம் - ninnukori varanam

நின்னுகோரி வர்ணம் இசைத்திட என்னை தேடி வரணும் 
ஒரு கிளி தனித்திருக்க உனக்கென தவமிருக்க 
இருவிழி சிவந்திருக்க இதழ் மட்டும் வெளுத்திருக்க 
அழகிய ரகுவரனே அனுதினமும்

உன்னைத்தான் சின்னப்பெண் ஏதோ கேட்க 
உள்ளுக்குள் அங்கங்கே ஏக்கம் தாக்க 
மொட்டுத்தான் மெல்லத்தான் பூப்போல் பூக்க 
தொட்டுப்பார் கட்டிப்பார் தேகம் வேர்க்க
பூஜைக்காக வாடுது தேவன் உன்னை தேடுது 
ஆசை நெஞ்சு ஏங்குது ஆட்டம் போட்டு தூங்குது 
உன்னோடு நான் ஓயாமல் தேனாற்றிலே நீராட நினைக்கையில் 

பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு 
என்னென்ன ராகங்கள் நீதான் காட்டு 
இன்றல்ல நேற்றல்ல காலம் தோறும் 
உன்னோடு பின்னோடும் காதல் நெஞ்சம் 
வண்ணப்பாவை மோகனம் வாடிப் போன காரணம் 
கன்னித்தோகை மேனியில் மின்னல் பாய்ச்சும் வாலிபம் 
உன் ஞாபகம் நீங்காமல் என் நெஞ்சிலே தியாகக் கொதிக்குது 

மோகம் என்னும் - mogam ennum

மோகம் என்னும் தீயில் என் மனம் வெந்து வெந்து உருகும் 
வானம் எங்கும் அந்த பிம்பம் வந்து வந்து விலகும் 
மோகம் என்னும் மாயப் பேயை நானும் கொன்று போட வேண்டும் 
இல்லை என்ற போது எந்தன் மூச்சு நின்று போக வேண்டும் 
தேகம் எங்கும் மோகம் வந்து யாகம் செய்யும் நேரம் நேரம்
தாயே இங்கு நீயே வந்து தண்ணீர் ஊற்ற வேண்டும் வேண்டும்
மனதில் உனது ஆதிக்கம் இளமையின் அழகு உயிரை பாதிக்கும் 
விரகம் இரவை சோதிக்கும் கனவுகள் விடியும் வரையில்  நீடிக்கும் 
ஆசை என்னும் புயல் வீசி விட்டதடி
ஆணிவேர் வரையில் ஆடிவிட்டதடி காப்பாய் தேவி 

கண்ணாலே காதல் கவிதை - kannalae kadhal kavithai

கண்ணாலே காதல் கவிதை சொன்னாளே எனக்காக 
கண்ணாளன் ஆசை மனதை தந்தானே எனக்காக 
கல்லூரி வந்து போகும் வானவில் நீதான் 
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே

கடற்கரை தனில் நீயும் நானும் உலவும்பொழுது 
பறவையைப் போல் கானம் பாடி பறக்கும் மனது 
இங்கு பாய்வது புது வெள்ளமே இணை சேர்ந்தது இரு உள்ளமே 
குளிர் வாடை தான் செந்தளிரிலே இந்த வாலிபம் தன் துணியிலே 
இளமேனி உன் வசமோ 

உனக்கென மணிவாசல் போலே மனதை திறந்தேன் 
மனதுக்குள் ஒரு ஊஞ்சலாடி உலகை மறந்தேன் 
வளையோசைகள் உன் வரவைக் கண்டு இசைக் கூட்டிடும் தன் தலைவன் என்று 
நெடுங்காலங்கள் நம் உறவைக்கண்டு நமை வாழ்த்திட நல் இதயம் உண்டு 
இன்ப ஊர்வலம் இதுவோ

கலைவாணியே - kalaivaaniyae

கலைவாணியே உனைத்தானே அழைத்தேன் 
உயிர்த்தீயை வளர்த்தேன் 
வரவேண்டும் வரம் வேண்டும் 
துடித்தேன் தொழுதேன் பல முறை 
நினைத்தேன் அழுதேன் இசை தரும் 

சுரம் பாடி சிரித்தாய் சிரிப்பாலே எரித்தாய் 
மடிமீதில் மரித்தேன் மறு ஜென்மம் கொடுத்தாய் 
சிறு விரல்களில் தலை கோதி மடிதனில் என்னை வளர்த்தாய் 
இசை எனும் வரம் வரும் நேரம் திசை சொல்லவில்லை பறந்தாய் 
முகம் காட்ட மறுத்தாய் முகவரியை மறைத்தாய் 
நீ முன் வந்து பூச்சிந்து விழித்துளிகள் தெறிக்கிறது துடைத்துவிடு -- (கலைவாணியே)

உள்ளம் அழுதது உன்னைத் தொழுதது உனது உயிரில் இவன் பாதி 
கங்கை தலையினில் மங்கை இடையினில் சிவனும் இவனும் ஒரு ஜாதி 
ராமன் ஒரு வகை கண்ணன் ஒரு வகை இரண்டும் உலகில் சமநீதி 
அங்கே திருமகள் இங்கே கலைமகள் அவளும் இவளும் சரிபாதி 
கண்ணீர் பெருகியதே ஆ....
கண்ணீர் பெருகிய கண்ணில் உன் முகம் அழகிய நிலவென மிதக்கும் 
உயிரே உயிரின் உயிரே 
அழகே அழகின் அழகே 
இனி அழ வலுவில்லை விழிகளில் துளியில்லை 
இனி ஒரு பிரிவில்லை துயர் வர வழியில்லை வருவாய் 

காலகாலமாக வாழும் - kalakalamaga vaazhum

காலகாலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம் 
காளிதாசன் கம்பன் கூட கண்டதில்லை எங்கள் சொப்பனம் 
பூமி எங்கள் சீதனம் வானம் எங்கள் வாகனம் 
யாரடா நான் தீயடா ஹே பகைவனே போ

வீசும் காற்றுக்கு சட்டம் இல்லை ஒரு வட்டம் இல்லை தடை யாரும் இல்லை 
எங்கள் அன்புக்கு தோல்வி இல்லை ஒரு கேள்வி இல்லை மலர் மாலை நாளை 
முள்ளை யார் அள்ளி போட்டாலும் முல்லை பூவாக மாறாதோ 
ஆஹா பூவுக்கு யார் இங்கு தீ வைப்பது 
பகையே பகையே விலகு விலகு ஓடு 

மோதி பார்க்காதே என்னைக் கண்டு நீ வாழைத்தண்டு இவன் யானைக்கன்று 
நாளும் போராடும் வீரம் உண்டு சுய மானம் உண்டு பகை வெல்வோம் இன்று 
பாதை இல்லாமல் போனாலும் காதல் தேரோட்டம் நில்லாது
பந்தம் நம் பந்தம் என்றென்றும் தீப்பந்தமே 
இணைவோம் இணைவோம் பகையை சுடுவோம் நாமே

இருபது கோடி நிலவுகள் - irupathu kodi nilavugal

இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மை ஆனதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய கண்கூசுதோ 

குழைகின்ற தங்கங்கள் கன்னங்கள் ஆகாதோ 
நெளிகின்ற வில் ரெண்டு புருவங்கள் ஆகாதோ 
நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல யாருமில்லையே 
ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே

தங்கமான கூந்தல் தாழ்ந்து வந்ததென்ன 
மங்கை உந்தம் பாதம் கண்டு  வணக்கம் சொல்லுதோ 
தேன் மிதக்கும் உதடு சேர்ந்து நிற்பதென்ன 
ஒன்றை ஒன்று முத்தம் இட்டு இன்பம் கொள்ளுதோ 
மானிட பிறவி என்னடி மதிப்பு உன் கால் விரல் நகமாய் இருப்பதே சிறப்பு 

ஜூலை மாதம் பூக்கும் கொண்டை பூக்கள் போல 
சேலை கொண்ட பெண்ணின் அங்கம் தோற்றம் காட்டுதே  
தாஜ்மஹாலின் வண்ணம் மாறக்கூடும் பெண்ணே 
மேனி உந்தன் கன்னம் இன்னும் வண்ணம் கூடுதே 
நிறமுள்ள மலர்கள் சோலைக்கு பெருமை 
நீயுள்ள ஊரில் வசிப்பது பெருமை

இதோ இதோ என் பல்லவி - idho idho en pallavi

இதோ இதோ என் பல்லவி எப்போது கீதமாகுமோ
இவன் உந்தன் சரணமென்றால் அப்போது வேதமாகுமோ 

என் வானமெங்கும் பௌர்ணமி இது என்ன மாயமோ 
என் காதலா உன் காதலால் நான் காணும் கோலமோ 
என் வாழ்க்கையென்னும் கோப்பையில் இது என்ன பானமோ 
பருகாமலே ருசியேறுதே இது என்ன ஜாலமோ 
பசி என்பதே ருசி அல்லவா அது என்று தீருமோ 

அந்த வானம் தீர்ந்து போகலாம் நம் வாழ்க்கை தீருமா 
பருவங்களும் நிறம் மாறலாம் நம் பாசம் மாறுமா 
ஒரு பாடல் பாட வந்தவள் உன் பாடல் ஆகிறேன்
விதி மாறலாம் உன் பாடலில் சுருதி மாறக்கூடுமா 
நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா 

எனக்கொரு சிநேகிதி - enakkoru snegithi

எனக்கொரு சிநேகிதி சிநேகிதி தென்றல் மாதிரி 
நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி பேசும் பைங்கிளி 
உன் முகம் பார்க்க தோன்றினால் பூக்களை பார்த்துக் கொள்கிறேன் 
பூக்களின் காதில் செல்லமாய் உன் பெயர் சொல்லி பார்க்கிறேன் 

மேகமது சேராது வான்மழையும் வாராது 
தனிமையில் தவித்தேனே உன்னை எண்ணி இளைத்தேனே 
மேலிமையும் வாராது கீழிமையும் சேராது 
உனக்கிது புரியாதா இலக்கணம் தெரியாதா 
சம்மதங்கள் உள்ளபோதும் வார்த்தை ஒன்று சொல்லவேண்டும் 
வார்த்தை வந்து சேரும் போது நாணம் என்னை கட்டிபோடும்
மௌனம் ஒன்று போதும் போதுமே கண்கள் பேசி விடுமே

கைவளையல் குலுங்காமல் கால் கொலுசு சிணுங்காமல் 
அணைப்பது சுகமாகும் அது ஒரு தவமாகும் 
மோகம் ஒரு பூப்போல தீண்டியதும் தீப்போல 
கனவுகள் ஒரு கோடி நீ கொடு என் தோழி 
உன்னை தந்து என்னை நீயும் வாங்கி கொண்டு நாட்களாச்சு 
உன்னை தொட்ட பின்பு தானே முட்கள் கூட பூக்கள் ஆச்சு 
விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும் வீணையாகும்

என்னவோ என்னவோ - ennavo ennavo

என்னவோ என்னவோ என் வசம் நானில்லை 
என்ன நான் சொல்வதோ என்னிடம் வார்த்தை இல்லை 

உன் சுவாசத்திலே நான் சேர்ந்திருப்பேன் 

உன் ஆயுள் வரை தான் வாழ்ந்திருப்பேன் 
என்னோடு நீயாக உன்னோடு நானாக வா ப்ரியமானவனே 

மழை தேடி நான் அலைவேன் சம்மதமா சம்மதமா
குடையாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
விரல் பிடித்து நகம் கடிப்பேன் சம்மதமா சம்மதமா
நீ கடிக்க நகம் வளர்ப்பேன் சம்மதமா சம்மதமா
விடிகாலை வேளை வரை என் வசம் நீ சம்மதமா
இடைவேளை வேண்டும் என்று இடை கேட்கும் சம்மதமா 
நீ பாதி நான் பாதி என்றிருக்க சம்மதமா
என் உயிரில் சரி பாதி நான் தருவேன் சம்மதமா 

இமையாக நானிருப்பேன் சம்மதமா சம்மதமா 
இமைக்காமல் பார்த்திருப்பேன் சம்மதமா சம்மதமா 
கனவாக நான் வருவேன் சம்மதமா சம்மதமா
கண்மூடி தவமிருப்பேன் சம்மதமா சம்மதமா
ஒரு கோடி ராத்திரிகள் மடிதூங்க சம்மதமா
பலகூட பௌர்ணமிகள் பார்த்திருப்பேன் சம்மதமா
பிரியாத வரம் ஒன்றை தர வேண்டும் சம்மதமா
பிரிந்தாலும் உன்னை சேரும் உயிர் வேண்டும் சம்மதமா