Friday, October 16, 2015

வாள் வீசும் வாழ்க்கை - vaal veesum vaazhkai

vaal veesum vaazhkai nimirnthaal thalai illai
nee unnai kaaka paninthaal pizhai illai
un pokkil ponaal oor seendaathey
unnai don pola kaatikondaal kai kaal irukaadhe

nee pogum saalai un peril indrae maara ennadhe thollai
un velai mattum seythaale un naatkal azhagaagum naalai
vedikkai paarthu veenaay thirigindraay
vettai naaypola naakkai neeti aeno alaigindray

yaar ingae enna seythaalum kangal rendai thirai pottu moodu
time kaetal yaarkum solladhe un time-ai sari paarthu oodu
naay vesham podum naay ingillai
vesham podaamal manidhan vaazha engum vazhiyillai

vaal veesum vaazhkai nimirnthaal thalai illai
nee unnai kaaka paninthaal pizhai illai
un pokkil ponaal oor seendaathey
ingu nee unnum sotril kooda un paer kidaiyadhe

வாள் வீசும் வாழ்க்கை நிமிர்ந்தால் தலை இல்லை
நீ உன்னை காக்க பணிந்தால் பிழையில்லை
உன் போக்கில் போனால் ஊர் சீண்டாதே
உன்னை டான் போல காட்டிக்கொண்டால் கை கால் இருக்காதே

நீ போகும் சாலை உன் பேரில் இன்றே மாற எண்ணாதே தொல்லை
உன் வேலை மட்டும் செய்தாலே உன் நாட்கள் அழகாகும் நாளை
வேடிக்கை பார்த்து வீணாய் திரிகின்றாய்
வேட்டை நாய் போல நாக்கை நீட்டி ஏனோ அலைகின்றாய்

யார் இங்கே என்ன செய்தாலும் கண்கள் ரெண்டை திரை போட்டு மூடு
டைம் கேட்டால் யார்க்கும் சொல்லாதே உன் டைமை சரி பார்த்து ஓடு
நாய் வேஷம் போடும் நாய் இங்கில்லை
வேஷம் போடாமல் மனிதன் வாழ எங்கும் வழியில்லை

வாள் வீசும் வாழ்க்கை நிமிர்ந்தால் தலை இல்லை
நீ உன்னை காக்க பணிந்தால் பிழையில்லை
உன் போக்கில் போனால் ஊர் சீண்டாதே
இங்கு நீ உண்ணும் சோற்றில் கூட உன் பேர் கிடையாதே 

ஒரு பொன்மானை நான் - oru ponmaanai naan

oru ponmaanai naan kaana thagathimithom
oru ammaanai naan paada thagathimithom
salangaiyittal oru maadhu sangeetham nee paadu
 aval vizhigalil oru pazharasam adhai kaanpadhil enthan paravasam

thadakathil meen rendu kaamathil thadumari thamarai poo meethu vizhunthanavo
idhai kanda vegathil bramanum mogathil padaithita paanam thaan un kangalo
kaatril asainthu varum nandhavanathu kili kaalgal mulaithathendru nadai pottaal
jathi enum mazhiyinilae rathi ival nanainthidave
athil baratham thulir vittu poopola poothaada
manam engum manam veesuthu
enthan manam engum manam veesuthu

santhana kinnathil kunguma sangamam arangera adhu thaane un kannam
megathai mananthida vaanathil suyamvaram nadathidum vaanavil un vannam
idaiyin pinnazhagil irandu kudathai konda pudhiya thamburavai meeti sendraal
kalai nilaa meniyile sulaipalaa suvaiyai kanden
andha kattudal mottudal uthiraamal sathiradi
mathi thannil kavi saerkuthu
enthan mathi thannil kavi saerkuthu

ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம் அதை காண்பதில் எந்தன் பரவசம்

தடாகத்தில் மீன்ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரை பூமீது விழுந்ததென்னவோ
இதைக் கண்ட வேகத்தில் பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட
பானம் தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்து கிளி
கால்கள் முளைத்தது என்று நடை போட்டாள்
ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே
அதில் பரதம் துளிர்விட்டு பூப்போல பூத்தாட
மனம் எங்கும் மணம் வீசுது
எந்தன் மனம் எங்கும் மணம் வீசுது 

சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேற அது தானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச் சென்றால்
கலை நிலா மேனியிலே சுளைபலா சுவையைக் கண்டேன்
அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
மதி தன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது

Friday, October 2, 2015

கொஞ்சி கொஞ்சி அலைகள் - konji konji alaigal

konji konji alaigal ooda kodai thendral malargal aada
kaatrile paravum oligal kanavile mithakum vizhigal
kanden anbe anbe oo..anbil vantha raagame annai thantha geethame
endrum unnai paaduven manathil inba therum oorum

maanguyil koovuthu maamaram pookkuthu megam vanthu thaalata
ponmayil aaduthu venpani thoovuthu boomiyengum seeraata
aalamvizhuthu aada adhil aasai oonjal aada
annangalin oorvalam..swarangalin thoranam
engengum paaduthu kaadhal geethangale

maathavan poonguzhal manthira geethathil maathar thammai maranthaada
aadhavan karangalin aadharavaal ponni aatril ponpol alaiyaada
kaalaipaniyil roja pudhu kavithai paadi aada
iyarkaiyin adhisayam...vaanavil ooviyam
engengum paaduthu kaadhal geethangale

கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட கோடை தென்றல் மலர்கள் ஆட
காற்றிலே பரவும் ஒலிகள் கனவிலே மிதக்கும் விழிகள்
கண்டேன் அன்பே அன்பே
ஓ அன்பில் வந்த ராகமே அன்னை தந்த கீதமே
என்றும் உன்னை பாடுவேன் மனதில் இன்ப தேனும் ஊறும்
மாங்குயில் கூவுது மாமரம் பூக்குது மேகம் வந்து தாலாட்ட
பொன்மயில் ஆடுது வெண்பனி தூவுது பூமியெங்கும் சீராட்ட
ஆலம்விழுது ஆட அதில் ஆசை ஊஞ்சல் ஆட
அன்னங்களின் ஊர்வலம்....
ஸ்வரங்களின் தோரணம்....
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே
மாதவன் பூங்குழல் மந்திர கீதத்தில் மாதர் தம்மை மறந்தாட
ஆதவன் கரங்களின் ஆதரவால் பொன்னி ஆற்றில் பொன்போல் அலையாட
காலைபனியில் ரோஜா புது கவிதை பாடி ஆட
இயற்கையின் அதிசயம்...
வானவில் ஓவியம்....
எங்கெங்கும் பாடுது காதல் கீதங்களே

Thursday, October 1, 2015

நான் ஆளான தாமரை - naan aalaana thaamara

naan aalaana thaamara
romba naalaga thoongala 
ammi mithichum naeku edhuvum illa
andha kavala noku puriyavilla
naan thotta enna sutta vidum vaango
ada kitte vanthu muththam onnu thaango

maami madisara paatha unga mogam aerum thaagam meerum
purinjikiten naan therinjikiten
innum enna thalli vecha en udambu thaangaathu
ungala thaan enni intha kannu rendum thoongaathu
unga maarmela sayanum madimela aalanum thadupela idam kodupela
vanji manam kenja ada vanjam enna konja konja konja...vaangonna

nethu ruthuvaana seetha ippo naalu maasam moonu vaaram
kulikkalayaam kuli kulikkalayaam
pulla varam illaiyinna illaramae paavamnaa
puthiketta sathiyatha vituputtu vaangonna
unga vaendaatha rosamum veembaana kovamum vidungonna katti pidingonna
yamma yamma ulla naan ennanu thaan solla solla solla....

நான் ஆளான தாமரை 
ரொம்ப நாளாக தூங்கல 
அம்மி மிதிச்சும் நேக்கு எதுவும் இல்ல 
அந்த கவலை நோக்கு புரியவில்ல 
நான் தொட்டா  என்ன சுட்டா விடும் வாங்கோ 
அட கிட்டே வந்து முத்தம் ஒண்ணு தாங்கோ 

மாமி மடிசார பாத்து உங்க மோகம் ஏறும் தாகம் மீறும் 
புரிஞ்சிகிட்டேன் நான் தெரிஞ்சிகிட்டேன் 
இன்னும் என்ன தள்ளி வெச்சா என் உடம்பு தாங்காது 
உங்கள தான் எண்ணி இந்த கண்ணு ரெண்டும் தூங்காது 
உங்க மார்மேல சாயணும் மடிமேலஆளணும் தடுப்பேளா இடம் கொடுப்பேளா 
வஞ்சி மனம் கெஞ்ச அட வஞ்சம் என்ன கொஞ்ச கொஞ்ச கொஞ்ச...வாங்கோண்ணா 

நேத்து ருதுவான சீதா இப்போ நாலு மாசம் மூணு வாராம் 
குளிக்கலயாம் குளி குளிக்கலயாம்
புள்ளை வரம் இல்லையின்னா இல்லறமே பாவம் ணா 
புத்திகெட்ட சத்தியத்த விட்டுபுட்டு வாங்கோண்ணா 
உங்க வேண்டாத  ரோசமமும் வீம்பான கோவமும் விடுங்கோன்னா கட்டி பிடிங்கோண்ணா 
யம்மா யம்மா உள்ள நான் என்னநானு தான் சொல்ல சொல்ல சொல்ல...

கண்மணி அன்போடு காதலன் - kanmani anbodu kaadhalan

kanmani anbodu kaadhalan naan ezhuthum kadithame
ponmani un veetil sowkiyama naan ingu sowkiyame
unnai enni paarkkaiyil kavidhai kottudhu 
adhai ezhutha ninaikkayil vaarthai muttudhu

undaana kaayamengum thannale maripona maayamenna ponmaane ponmaane
enna kaayam aanapodhum en maeni thaangikkollum unthan maeni thaangaathu senthaene
enthan kaadhal ennavendru sollaamal aenga aenga azhugai vanthathu
enthan sogam unnai thaakkum endrennum podhu vantha azhugai nindrathu

manidhar unarnthu kolla idhu manithar kaadhal alla adhaiyum thaandi punithamaanadhu
abiraamiye thaalaatum samiye naanthaane theriyuma
sivagamiye sivanil neeyum paadhiye adhuvum unakku puriyuma

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே 
பொன்மணி உன் வீட்டில் சௌக்யமா நான் இங்கு சௌக்யமே 
உன்னை எண்ணி பார்க்கையில் கவிதை கொட்டுது 
அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது 

உண்டான காயமெங்கும் தன்னாலே மாறிப்போன மாயமென்ன பொன்மானே பொன்மானே 
என்ன காயம் ஆனபோதும் என் மேனி தாங்கிக்கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே 
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது 
எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது 
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதர் காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது 
அபிராமியே தாலாட்டும் சாமியே நான்தானே தெரியுமா 
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா 

நதியில் ஆடும் பூவனம் - nadhiyil aadum poovanam

nadhiyil aadum poovanam alaigal veesum saamaram
kaaman saalai yaavilum oru deva roja oorvalam

kulikum podhu koonthalai thanathaadai aakkum devathai
alaiyil midhakkum maadhulai ival brahma devan saathanai
thavangal seyyum poovinai indru parithu sellum kaamanai
ethirthu nindraal vethanai ambu thodukum podhu nee thunai
sodhanai....

salangai oosai podhume enthan pasiyum theernthu pogume
uthaya gaanam podhume enthan uyiril amudham oorume
iravu muzhuthum geethame nilavin madiyil iirame
viralgal virunthu kaetkume oru vilakku vizhithu paarkumae
idhazhgal idhazhai thedume oru kanavu padukai podumae
podhumae...

நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம் 
காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம் 

குளிக்கும் போது கூந்தலை தனதாடை ஆக்கும் தேவதை 
அலையில் மிதக்கும் மாதுளை இவள் பிரம்ம தேவன் சாதனை 
தவங்கள் செய்யும் பூவினை இன்று பறித்து செல்லும் காமனை 
எதிர்த்து நின்றால் வேதனை அம்பு தொடுக்கும் போது நீ துணை 
சோதனை.....

சலங்கை ஓசை போதுமே எந்தன் பசியும் தீர்ந்து போகுமே 
உதய கானம் போதுமே எந்தன் உயிரில் அமுதம் ஊருமே 
இரவு முழுதும் கீதமே நிலவின் மடியில் ஈரமே 
விரல்கள் விருந்து கேட்குமே ஒரு விளக்கு விழித்து பார்க்குமே 
இதழ்கள் இதழை தேடுமே ஒரு கனவு படுக்கை போடுமே 
போதுமே...