Sunday, April 21, 2013

என்னுள்ளே என்னுள்ளே - Ennulle ennulle

என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஒரு வார்த்தை இல்லை கூற
எதுவோ ஓர் மோகம்

கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்

கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம்
ஆலிலையில் அரங்கேற 
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்