Friday, August 31, 2012

காதலா காதலா காதலால் - Kaadhala Kaadhala

காதலா காதலா காதலால் தவிக்கிறேன்
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன் 
காதலி காதலி காதலில் தவிக்கிறேன் 
ஆதலால் வா வா அன்பே அழைக்கிறேன் 

நாள் தோறும் வீசும் பூங்காற்றைக் கேளு 
என் வேதனை சொல்லும்
நீங்காமல் எந்தன் நெஞ்சோடு நின்று 
உன் நியாபகம் கொல்லும் 
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி தத்தித்தவிக்கையில் கண்ணில் மழைத்துளி 
இந்த ஈரம் என்று மாறுமோ 

ஓயாத தாபம் உண்டான நேரம் 
நோயானதே நெஞ்சம் 
ஊர் தூங்கினாலும் நான் தூங்க மாட்டேன் 
தீயானதே மஞ்சம் 
நடந்தவை எல்லாம் கனவுகள் என்று மணிவிழி மானே மறந்திடு இன்று 
ஜென்ம பந்தம் விட்டு போகுமோ 

இன்றைக்கு ஏன் இந்த - Indraiku aen indha

இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே 
இன்பத்தில் ஆடுது என் மனமே 
கனவுகளின் சுயம்வரமோ கண்திறந்தால் சுகம் வருமோ 

பூங்குயில் சொன்னது காதலின் மந்திரம் பூமகள் காதினிலே 

பூவினைத் தூவிய பாயினில் பெண்மனம் பூத்திடும் வேளையிலே 
நாயகன் கைத்தொடவும் வந்த நாணத்தை பெண் விடவும் 
மஞ்சத்திலே கொஞ்ச கொஞ்ச 
மங்கை உடல் கெஞ்ச கெஞ்ச 
சுகங்கள் சுவைக்கும் இரண்டு விழிகளில் 

கரி மாக ரிஸா 

ரிகம கமதா  
ஸத ரிஸ தம 
தஸரி கமத மத மத ஸரி 

ஸாஸ ஸாஸ ஸாஸ ஸாஸ 
சரி கரி ரிச சத தம மக 
ரீரி ரீரி ரீரி ரீரி 
ரிக மக கரி ரிச சத தம  

மாவிலைத்தோரணம் ஆடிய காரணம் தேவியின் திருமணமோ 
ஆலிலையோ தொட ஆளில்லையோ அதில் ஆடிடும் என் மனமோ 
காதலின் பல்லவியோ 
அதில் நான் அனுபல்லவியோ 
மஞ்சத்திலே ஏழு ஸ்வரம் இன்பத்திலே நூறு வரம் 
மிதந்து மறந்து மகிழ்ந்த நெஞ்சத்தில்