Saturday, September 10, 2011

திலோத்தமா - Thilothama


ஒரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ திலோத்தமா
இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ திலோத்தமா
ஆயிரம் கனவுகள் அம்மாமா தந்தவள் நீயம்மா

இதயம் இப்போது கண்ணில் துடிக்குதே என்ன என்ன 
என்ன என்ன என்ன என்ன
கண்கள் மூடாமல் கனவு தோன்றுதே என்ன
இரவு இப்போது நீளமானதே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
ஜன்னலில் நிலவு சண்டை போடுதே என்ன
எதிலும் உந்தன் பிம்பம் தோன்றுதே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
என் பேர் இப்போது மறந்து போனதே என்ன
வானம் இப்போது பக்கம் வந்ததே என்ன என்ன என்ன என்ன என்ன என்ன
தூக்கம் உன்னாலே தூரமானதே என்ன

ஒஹ்ஹோ......ஒரு கடலினிலே நதி கலந்த பின்னே அது பிரிவதில்லை
ஒஹ்ஹோ......ஒரு கவிதையிலே வந்து கலந்த பின்னே சொல்லும் மறைவதில்லை

காற்றே இல்லாமல் வாழ்க்கை என்பதே இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
காதல் கொள்ளாத ஜீவன் பூமியில் இல்லை
கண்கள் இல்லாமல் காட்சி என்பதே இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
கனவே இல்லாமல் நினைவு என்பதும் இல்லை
தண்ணீர் இல்லாமல் எந்த மீனும் இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
தலைவி இல்லாமல் காதல் காவியம் இல்லை
மண்ணை தொடாத மழையும் வானிலே இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
உன்னை தொடாமல் உறவு என்பதும் இல்லை
இந்த இயற்கையெல்லாம் நம் இருவரையும் கண்டு மலைத்ததென்ன
இது காதலுக்கே உள்ள ஜீவ குணம் இதில் கலக்கமென்ன

தையத்தா தையத்தா - Thaiyathaa


தையத்தா தையத்தா தைய தைய தா
பைய்யத்தா பைய்யத்தா பஞ்சு முத்தம் தா
உயிர் வாழ்கிற வரைக்கும் உனக்கே மடி கொடுப்பேன்
இனி ஓர் ஜென்மம் இருந்தால் உனக்கே மீண்டும் பிறப்பேன்

உனது கனவில் நினைவில் உருவில் நானே என்றும் இருப்பேன்

நிலங்கள் உடைந்து போனாலும் நிழல்கள் உடைவதில்லை
நேசம் பாசம் நிஜமானது
மழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை
அன்பே நம் காதல் அது போன்றது
பெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை
சொன்னதை செய்தாலே நிகரேதும் இல்லை
நீ உறுதியானவன் என் உரிமையானவன்
பசி ருசியை பகல் இரவை பகிர்ந்து கொள்ளும் தலைவன்

பிறவி வந்து போனாலும் உறவு முறிவதில்லை
உயிரை உயிரால் முறுக்கேற்ற
வா
உன்னைப் போன்ற அன்பாளன் யார்க்கு வாய்க்கும் மீண்டும்
உடலை உடலால் குளிப்பாட்ட வா
ஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா
மறுகணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும்
உன்னை இறுக்கி அணைக்கிறேன் உயிர் நுரைக்க ரசிக்கிறேன்
அணுஅணுவாய் உனைப்பிளந்து என் ஆயுள் அடைப்பேன்

ராசாத்தி மனசுல - Raasaathi manasula


ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புதான்
புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது

ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புதான்

முள்ளிரிக்கும் பாதை நீ நடந்த போதும்
முள்ளேடுத்து போட்டு நீ நடக்கலாகும்
வீதியிலே நீ நடந்த கண்கள் எல்லாம் உன் மேலே தான்
முள்ளுதெச்சா தாங்கும் நெஞ்சம் கண்கள் தெச்சா தாங்காதையா
நெதமும் உன் நெனப்பு வந்து வெரட்டும் வீட்டுல
உன்ன சேர்ந்தாலும் உன் உருவம் என்ன வாட்டும் வெளியில
இது ஏனோ அடி மானே
அத நானோ அறியேனே

செந்துருக்க கோலம் வானத்துல பாரு
வந்த இந்த நேரம் போட்டுவெச்சதாரு
சேரும் இள நெஞ்சங்கள வாழ்த்து சொல்ல போட்டாகளா
ஊருக்குள்ள சொல்லாதத வெளியில் சொல்லிதந்தாகளா
வானம் பாடுது இந்த பூமி பாடுது
ஊரும் வாழ்த்துது இந்த உலகம் வாழ்த்துது
தடை ஏதும் கிடையாது
அதை நானும் அறிவேனே

உறவுகள் தொடர்கதை - Uravugal thodarkathai


உறவுகள் தொடர்கதை உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே

உன் நெஞ்சிலே பாரம் உனக்காகவே நானும்
சுமைதாங்கியாய் தாங்குவேன்
உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்
வேதனை தீரலாம் வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே புது அழகிலே நாமும் இணையலாம்

வாழ்வென்பதோ கீதம் வளர்கின்றதோ நாதம்
நாளொன்றிலும் ஆனந்தம் 
நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெலாம் இன்பம்
சுகராகமே ஆரம்பம்
நதியிலே புதுப்புனல் கடலிலே கலந்தது
நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது

எனது விழி வழிமேலே - Enadhu vizhi vazhimele

எனது விழி வழிமேலே
கனவு பல விழிமேலே
வருவாயா நீ வருவாயா
வருவாயா வருவாயா என நானே எதிர்பார்த்தேன்
இதை சொல்லத்துடிக்குது மனசு
சுகம் அள்ளத் தவிக்கிற வயசு


பள்ளிக்கூட பாடம் ஏதும் எனக்கில்லை ஞாபகம்
உன் கண்ணில் நூறு பாடம் கேட்டு மறக்காத ஞாபகம்
தடுமாற்றம் எதற்கு படித்தாலே உனக்கு
காதல் சிறகை காற்றில் விரித்து
நினைத்தாலே இனிக்கும் கனவின்று பலிக்கும்
உறங்காமல் உனைத்தானே நினைத்தே தனியாய் தவித்தேனே


பிள்ளைபோல தோளில் போட்டு தாலாட்டு பாடுவேன்
முல்லை பூவில் மேடை போட்டு உன்னோடு ஆடுவேன்
இமைக்காமல் ரசித்தேன் ருசிபார்த்து பசித்தேன்
ஏது உறக்கம் வேண்டாம் கிறக்கம்
வட்டி போட்டு மொத்தமா கட்ட வேணும் மொத்தமா
உனைத்தானே உனைத்தானே தனியாய் தவித்தே துடிக்காதே

Wednesday, September 7, 2011

புதியது பிறந்தது - Pudhiyathu piranthathu

அட புதியது பிறந்தது பழையது ஒதுங்குது
அரஹர சிவ சிவ பழைய பரமசிவமே 
அட பைத்தியம் தெளிஞ்சது வைத்தியம் பலிச்சது 
அரஹர சிவ சிவ பழைய பரமசிவமே 

ஒண்ணாச்சு பாரு இதுவர ரெண்டான ஊரு  
அண்ணாச்சி மூளை முடிச்சது பொன்னான வேலை 
அட வீராப்பும் பொல்லாப்பும் பொய்யா போச்சு அம்மம்மா 

கூடாம நம்மைத்தான் கூறுகட்டி சிலர் கோளாறு செஞ்சாங்க வேலி கட்டி 
ஆத்தாடி அண்ணன்தான் தோளுதட்டி அத சாச்சாரு மண்ணில வாளில் வெட்டி 
உள்ளத்துணிவு உள்ளவரு ஊருக்குதவும் நம்மவரு 
வாத்தியத்த தொட்டுத்தான் கொட்டத்தான் கொட்டத்தான் 
ஓசையெல்லாம் எட்டட்டும் திக்கெட்டும் திக்கெட்டும்
அடி அம்மாடி எல்லோரும் ஆட்டம் போடும் நாள்தானோ 

அற்புதமா அதிசயமா பூத்திருக்கு  
முத்துநக ரத்தினமா கெடச்சிருக்கு 
நிச்சயமா தற்பெரும காத்திருக்கு 
பத்திரமா சக்தியவ துணையிருப்பா 

மூவேந்தர் தேர்விட்ட சீமையடி நம்ம முப்பாட்டன் ஏர்விட்ட பூமியடி 
வெள்ளாடு சிங்கத்த சாடுமடி இந்த வீரம் நம் மண்ணுக்கு சாட்சியடி 
மண்ணின் பெருமை காத்திடணும்  
அண்ணன் மொழியை கேட்டிடணும் 
ஓரினத்து மக்கள்தான்  நாமெலாம் பொன்னம்மா 
ஒர்வயத்து பிள்ளை தான் எல்லாரும் பொன்னம்மா 
அம்மாடி தெம்மாங்கு பாட்டு பாடும்  நாள்தானோ

பன்னீரில் நனைந்த - Paneeril nanaintha pookal

பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல சிரிக்க 
பொன்மேகம் சிவந்த வானம் எங்கும் மிதக்க 
வசந்தம் வரும் காலம் விழியில் வண்ண கோலம் 
கூ கூ குக்கூ கூ - கூ கூ குக்கூ கூ
சத்தம் கண்டு சந்தம் கொண்டு பாட்டு பாடு  குயிலே 

நானும் ஒர் தென்றல் தான் ஊரெல்லாம் சோலைதான் 
எங்குமே ஓடுவேன் 
நதியிலே நீந்துவேன் மலர்களை ஏந்துவேன் 
எண்ணம் போல் வாழுவேன் 
தந்தன தான தன தந்தன தான தன
இளமைக்காலம் மிக இனிமையானது 
உலகம் யாவும் மிக புதுமையானது 

மாளிகை சிறையிலே வாழ்ந்த நாள் வரையிலே 
சுதந்திரம் இல்லையே 
விடுதலை கிடைத்தது வாசலும் திறந்தது 
பறந்தது கிள்ளையே
தந்தன தான தன தந்தன தான தன
நிலவும் நீரும் இந்த அழகு சோலையும் 
எளிமையான அந்த இறைவன் ஆலயம் 

நீ ஆண்டவனா - Nee aandavana

நீ ஆண்டவனா தாய் தந்தை தான் உனக்கில்லையே 
கண்ணா நான் உன் ஜாதி தான் உறவென்பதே  எனக்கில்லையே 
கண்ணீர் என்ன கண்ணா நான் உன் மாமனே 
மண்ணில் வந்ததாலே நீ மண்ணின் மைந்தனே 

தாய் பாஷை அறியாத புது இந்தியன் நீ என்றால் பொயில்லையே
தன் ஜாதி சொல்லாமல் நீ வாழ்கிறாய் உன்போலே ஊரில்லையே 
இதழோரம் ஆயிரம் சிறு பூக்கள் பூக்கிறாய்  
ஒரு கண்ணால் பார்க்கிறாய் ஒதுக்கீடு கேட்கிறாய் 
தாலாட்டிட மொழியுண்டு வளர்வாய் பிறையே 
பாலூட்டிட வழியில்லை அதுதான் குறையே 
உந்தன் சோகம் சொன்னால் ஏக்கம் போய்விடும் 
எங்கள் சோகம் சொன்னால் உன் தூக்கம் போய் விடும் 


கலைகின்ற மேகங்கள் சபை கூடியே வான் வெளியில் தாலாட்டுதே 
தரைநின்ற பிறை ஐந்து கைவீசியே சூரியனை தாலாட்டுதே
முடியாத யாத்திரை முடிகின்ற வேளையில்
முத்தங்கள் தந்து நீ முள்ளானாய் சேலையில் 
நீ என்பது என் வாழ்வில் வரவா செலவா 
முள்ளென்பது ரோஜாவில் உறவா பகையா 
காலம் செய்த கோலம் நீ இங்கே வந்தது 
கண்ணீரோடு வந்து கண்ணீர் சேர்ந்தது  

ஆடியில சேதி - Aadiyile sethi solli

ஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வெச்சு
சேதி சொன்ன மன்னவரு தான்
எனக்கு சேதி சொன்ன மன்னவரு தான்
சொந்தஞ்சொல்லி நெத்தியில குங்குமத்த வெச்ச
என் மன்னவரு மன்னவரு தான்
அழகு மன்னவரு மன்னவரு தான்

சேல மேல சேல வெச்சு செவத்த பட்டு நூறு வெச்சு
ஊறு மெச்ச கைப்பிடிச்ச ஒரே ஒரு உத்தமரு
வீர பாண்டி தேரு போல பேரெடுத்த சிங்கந்தான்
ராமர் என்ன தர்மர் என்ன மாமன் மனசு தங்கந்தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்


பூவு கூட நாறு போல பூமி கூட நீரு போல 
மாமன் கூட சேர்ந்திருப்பேன் மதுர வீரன் பொம்மி போல
சேலையோட நூலு போல சேர்ந்திருக்கும் பந்தம் தான்
திருமாலும் சொக்கரும் சேர்ந்து தேடி தந்த சொந்தம் தான்
மாமாவே நீ வேணும் ஏழு ஏழு ஜென்மம் தான்