Saturday, July 18, 2015

என் வீட்டு ஜன்னல் - en veettu jannal

என் வீட்டு ஜன்னல் எட்டி ஏன் பாக்குற 
இள நெஞ்ச தொட்டு தொட்டு நீ தாக்குற 
கண்ணாலே பேசாதே கல்யாணம் பேசு 
கையோடு கை சேர்த்து பூங்காத்தா வீசு 
மருதாணி அரச்சு வெச்சேன் மஞ்சத்தண்ணி கரைச்சு வெச்சேன் ராசா ராசா 
உருகாம உருகி நின்னேன் உன் அழக பருகி வந்தேன் ராசா ராசா 

பாட்டு ஒரு பாட்டு புது பாட்டு இசை போட்டு முந்தானை தந்தானம் பாட 
கேட்டு அதை கேட்டு கிரங்காமல் சுருதி மீட்டு நெஞ்சோரம் ஸ்ரிங்காரம் தேட 
வயலோரம் வரப்போரம் தினம் காத்திருந்து வாட 
இரு தொழில் ஒரு மாலை இது ராத்திரியில் சூட 
நான் உறவாய் வரவா தரவா 

பாடு நடை போடு அழகோடு உறவாடு ஆகாயம் கிட்டே வராது 
போடு திரைபோடு முத்தாடி விளையாடு முச்சூடும் என்னை விடாது 
வருவேனே வருவேனே சிறு பூப்பரித்திட தானே 
வரம் நானே பெறுவேனே நீ மன்மத மலை தேனே 
நான் உறவாய் வரவா தரவா 

இந்த மான் - indha maan

இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்து தான் சிந்து பாடும் 
சிந்தைக்குள் ஆடும் ஜீவனே கண்மணியே 
சந்திக்க வேண்டும் தேவியே என்னுயிரே 

வேல்விழி போடும் தூண்டிலே நான் விழலானேன் கூண்டிலே 
நூலிடை தேயும் நோயிலே நான் வரம் கேட்கும் கோயிலே 
அன்னமே ....
அன்னமே எந்தன் சொர்ணமே உந்தன் எண்ணமே வானவில் வண்ணமே 
கன்னமே மதுக்கிண்ணமே அதில் பொன்மணி வைரங்கள் மின்னுமே 
எண்ணமே தொல்லை பண்ணுமே பெண் என்னும் கங்கைக்குள் பேரின்பமே 

பொன்மணி மேகலை ஆடுதே உன் விழி தான் இடம் தேடுதே 
பெண் உடல் பார்த்ததும் நாணுதே இன்பத்தில் வேதனை ஆனதே 
என் அத்தான்....
என் அத்தான் உன்னை எண்ணித்தான் உடல் மின்னத்தான் வேதனை பின்னத்தான் 
சொல்லித்தான் நெஞ்சை கிள்ளித்தான் என்னை சொர்கத்தில் தேவனும் சோதித்தான் 
மோகந்தான் சிந்தும் தேகந்தான் தாகத்தில் நான் நிற்க ஆனந்தம் தான் 

Friday, July 17, 2015

ராஜ ராஜ சோழன் - raaja raaja cholan

ராஜ ராஜ சோழன் நான் 
எனை ஆளும் காதல் தேசம் நீதான் 
பூவே காதல் தீவே 
மண்மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே 
உல்லாச பூமி இங்கு உண்டானதே 

கண்ணோடு கண்கள் ஏற்றும் கற்பூர தீபமே 
கைதீண்டும் போது பாயும் மின்சாரமே 
உல்லாச மேடை மேலே ஓரங்க நாடகம் 
இன்பங்கள் பாடம் சொல்லும் என் தாயகம் 
இங்கங்கு ஊஞ்சலாக நான் போகிறேன் 
அங்கங்கு ஆசை தீயில் நான் வேகிறேன் 
உன் ராக மோகனம் என் காதல் வாகனம் 
செந்தாமரை செந்தேன்மழை என் ஆவி நீயே தேவி 

கள்ளூர பார்க்கும் பார்வை உள்ளூர பாயுமே 
துள்ளாமல் துள்ளும் உள்ளம் சல்லாபமே 
வில்லோடு அம்பு ரெண்டு கொல்லாமல் கொல்லுதே 
பெண் பாவை கண்கள் என்று பொய் சொல்லுதே 
முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே 
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே 
தேனோடை ஓரமே நீராடும் நேரமே 
புல்லாங்குழல் தள்ளாடுமே பொன்மேனி கேளாய் ராணி 

இளைய நிலா - ilaya nila

இளைய நிலா பொழிகிறதே 
இதயம் வரை நனைகிறதே 
உலாப்போகும் மேகம் கனாக்கானுமே விழாக்காணுமே வானமே 

வரும் வழியில் பனிமழையில் பருவ நிலா தினம் நனையும் 
முகிலெடுத்து முகம் துடைத்து விடியும் வரை நடை பழகும் 
வான வீதியில் மேக ஊர்வலம் காணும் போதிலே ஆறுதல் தரும் 
பருவமகள் விழிகளிலே கனவு வரும் 

முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ 
முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ 
நீலவானிலே வெள்ளி ஓடைகள் ஓடுகின்றதே என்ன ஜாடைகள் 
விண்வெளியில் விதைத்தது யார் நவமணிகள் 

என் இனிய பொன் - en iniya pon

என் இனிய பொன் நிலாவே 
பொன் நிலவில் என் கனாவே 
நினைவிலே புது சுகம் 
தொடருதே தினம் தினம் 

பன்னீரை தூவும் மழை சில்லென்ற காற்றின் அலை சேர்ந்தாடும் எந்நேரமே  
என் நெஞ்சில் என்னனவோ வண்ணங்கள் ஆடும்திலை என் ஆசை உன்னோரமே 
வெண்நீல வானில் அதில் என்னென்ன மேகம் 
ஊர்கோலம் போகும் அதின் உள்ளாடும் தாகம் 
புரியாதோ என் எண்ணமே அன்பே 

பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே பூவான கோலங்களே 
தென்காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே என்னென்ன ஜாலங்களே 
கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும் 
கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும் 
இது தானே என் ஆசைகள் அன்பே 

இது ஒரு பொன்மாலை - idhu oru ponmaalai

இது ஒரு பொன்மாலை பொழுது 
வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள் 

ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும் ராத்திரி வாசலில் கோலமிடும் 
வானம் இரவுக்கு பாலமிடும் பாடும் பறவைகள் தாளமிடும் 
பூமரங்கள் சாமரங்கள் வீசாதோ 

வானம் எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கது  சேதிதரும்
ஒரு நாள் உலகம் நீதி பெரும் திருநாள் நிகழும் தேதி வரும் 
கேள்விகளால் வேள்விகளை நான் செய்வேன்

நான் தேடும் - naan thedum

நான் தேடும் செவ்வந்தி பூவிது 
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது 
பூவோ இது வாசம் போவோம் இனி காதல் தேசம் 

பறந்து செல்ல வழியில்லையோ பருவக் குயில் தவிக்கிறதே 
சிறகிரண்டும் விரித்துவிட்டேன் இளமையது தடுக்கிறதே 
பொன்மானே என் யோகந்தான் பெண்தானோ சந்தேகந்தான் 
என் தேவி.....
உன் விழி ஓடையில் நான் கலந்தேன் உன் கனி விழுமென தவம் கிடந்தேன் 
பூங்காற்று சூடாச்சு ராஜாவே யார் மூச்சு 

மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ 
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கும் அந்த சுகம் வருமோ 
தள்ளாடும் பெண் மேகந்தான் எந்நாளும் உன் வானம் நான் 
என் தேவா.....
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன் என் விரல் நகங்களை தினம் இழந்தேன் 
தாலாட்டு பாடாமல் தூங்காது என் பிள்ளை 


நிலவு தூங்கும் நேரம் - nilavu thoongum neram

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது
இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர் கதை தினம் தினம் வளர்பிறை

நான்கு கண்ணில் இன்று ஒரு காட்சியானதே 
வானம் காற்று பூமி இவை சாட்சியானதே 
நானுனை பார்த்தது பூர்வ ஜென்ம பந்தம் 
நீண்ட நாள் நினைவிலே வாழும் இந்த சொந்தம் 
நான் இனி நீ நீ இனி நான் 
வாழ்வோம் வா கண்ணே 

கீதை போல காதல் மிக புனிதமானது 
கோதை நெஞ்சில் ஆடும் இந்த சிலுவை போன்றது 
வாழ்விலும் தாழ்விலும் விலகிடாத நேசம் 
வாலிபம் தென்றலாய் என்றுமிங்கு வீசும் 
ஏன் மயக்கம் ஏன் தயக்கம் 
கண்ணே வா இங்கே 

நிலா காயும் நேரம் - nila kaayum neram

நிலா காயும் நேரம் சரணம் 
உலாப்போக நீயும் வரணும் 
பார்வையில் புதுப்புது கவிதைகள் மலர்ந்திட காண்பவை யாவுமே தேன் 
அன்பே நீயே அழகின் அமுதே 

தென்றல் தேரில் நான் தான் போகும் நேரம் பார்த்து 
தேவர் கூட்டம் பூத்தூவி பாடும் நல்ல வாழ்த்து 
கண்கள் மூடி நான் தூங்க திங்கள் வந்து தாலாட்டும் 
காலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும் 
நினைத்தால் இது போல் ஆகாததேது 
அணைத்தால் உனைத்தான் நீங்காது பூ மாது 
நெடு நாள் திருத்தோள்எங்கும் நீ கொஞ்ச 

அன்பே நீயே அழகின் அமுதே - (2)

மின்னல் நெய்த சேலை மேனி மீது ஆட 
மிச்சம் மீதி காணாமல் மன்னன் நெஞ்சம் வாட 
அர்த்த ஜாமம் நான் சூடும் ஆடை என்றும் நீயாகும் 
அங்கம் யாவும் நீ மூட ஆசை தந்த நோய் போதும் 
நடக்கும் தினமும் ஆனந்த யாகம் 
சிலிர்க்கும் அடடா ஸ்ரீதேவி பூந்தேகம் 
அனைத்தும் வழங்கும் காதல் வைபோகம் 

மாசி மாசம் ஆளான - maasi maasam aalaana

மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் உனக்கு தானே 
நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமா உனக்கு தானே
பூவோடு ஆ தேனாட 
தேனோடு ஓ நீயாடு 

ஆசை நூறாச்சு போங்க நிலவு வந்தாச்சு வாங்க 
நெருங்க நெருங்க பொறுங்க பொறுங்க ஓஹோஹோ 
ஆசை நான் கொண்டு வந்தால் அள்ளி தேன் கொள்ள வந்தால் 
மயங்கி கிறங்க கிறங்கி உறங்க ஓஹோஹோ 
வெப்பம் படருது படருது வெட்கம் வளருது மலருது 
கொட்டும் பனியிலே பனியிலே 
ஓட்டும் உறவிலே உறவிலே 

காமலீலா வினோதம் காதல் கவிதா விலாசம் 
படித்து படித்து எடுக்க எடுக்க ஓஹோஹோ 
ஆசை ஆஹா பிரமாதம் மோக கவிதா பிரவாகம் 
தொடுத்து தொடுத்து முடிக்க முடிக்க ஓஹோஹோ 
கொடிதான் தவழுது தவழுது பூப்போல் சிரிக்குது ஓஹோஹோ 
உறவோ நெருங்குது நெருக்குது உலகம் மயங்குது உறங்குது 

Thursday, July 16, 2015

கற்பூர பொம்மை - karpoora bommai

கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று 
கலந்தாட கைகோர்க்கும் நேரம் என் கண்ணோடு ஆனந்த ஈரம் 
முத்தே என் முத்தாரமே சபையேறும் பாடல் நீ பாடம்மா 

பூந்தேரிலே நீயாடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம் 
ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம் 
மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும் 
முத்தே என் முத்தாரமே சபையேறும் பாடல் நீ பாடம்மா 

தாயன்பிர்க்கே ஈடாதேம்மா ஆகாயம் கூட அது போதாது 
தாய் போல யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது 
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல் உன் பேச்சு நாளும் சென்தேன்குழல் 
முத்தே என் முத்தாரமே சபையேறும் பாடல் நீ பாடம்மா 

யாரும் விளையாடும் - yaarum vilayaadum

யாரும் விளையாடும் தோட்டம் 
தினம்தோறும் ஆட்டம் பாட்டம் 
போட்டாலும் பொறுத்துக்கொண்டு பொன்னுதரும்  சாமி 
இந்த மண்ணு நம்ம பூமி 
கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு 
ஆறோடும் ஊரப்பாத்து டேரா போடு 

கூடமும் மணிமாடமும் நல்ல வீடும் உண்டு 
தேடவும் பள்ளு பாடவும் பள்ளிக்கூடமுண்டு 
பாசமும் நல்ல நேசமும் வந்து கூடுமிங்கு 
பூசலும் சிறு ஏசலும் தினந்தோறும் உண்டு 
அன்பில்லா ஊருக்குள்ள இன்பம் இல்ல 
வம்பில்லா வாழ்க்கையென்றால் துன்பம் இல்ல 

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு 
ஆறோடும் ஊரப்பாத்து டேரா போடு 

ஆத்தி இது வாத்துக்கூட்டம் 
பாத்தா இவ ஆளு மட்டம் 
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம் 
சொல்லுறத கேளு நீ வேற ஊரைப்பாரு 
நான் சொல்லுறத கேளு கொஞ்சம் வேற ஊரைப்பாரு 
டேராவ பாத்து போடு ஓலத்தோடு வேறோரு போயிச்சேரு நேரத்தோடு 

ஆவியாகி போன நீரும் மேகமாச்சு 
மேக நீரும் கீழ வந்து ஏறியாச்சு 
ஆறு என்ன ஏறி என்ன நீரு ஒண்ணு  
வீடு என்ன காடு என்ன பூமி ஒண்ணு 
கடலுக்குள் சேரும் தண்ணி உப்பாகுது 
சிப்பிக்குள் கூடும் தண்ணி முத்தாகுது 
சேராத தாமரைப்பூ தண்ணி போலே மாறாது எங்க வாழ்வு வானம் போலே 


இதயம் ஒரு கோயில் - idhayam oru koyil

இதயம் ஒரு கோயில் அதில் உதயம் ஒரு பாடல் 
இதில் வாழும் தேவி நீ இசையே மலராய் நாளும் சூட்டுவேன் 

ஆத்ம ராகம் ஒன்றில் தான் ஆடும் உயிர்கள் என்றுமே 
உயிரின் ஜீவ நாடி தான் நாதம் தாளம் ஆனதே 
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே 
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை 
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை 
எனது ஜீவன் நீதான் என்றும் புதிது 

நீயும் நானும் போவது காதல் என்ற பாதையில் 
சேரும் நேரும் நேரம் வந்தது மீதித்தூரம் பாதியில் 
பாதை ஒன்று ஆன போதும் திசைகள் வேறம்மா 
உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா 
மீராவின் கண்ணன் மீராவிடமே 
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே 
வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே 

பனி விழும் இரவு - pani vizhum iravu

பனி விழும் இரவு 
நனைந்தது நிலவு 
இளங்குயில் இரண்டு 
இசைக்கின்ற பொழுது 
பூப்பூக்கும் ராப்போது பூங்காற்றும் தூங்காது 
வா வா வா 

பூவிலே ஒரு பாய்போட்டு பனித்துளி தூங்க 
பூவிழி இமை மூடாமல் பைங்கிளி ஏங்க 
மாலை விளக்கேற்றும் நேரம் 
மனசில் ஒரு கோடி பாரம் 
தனித்து வாழ்ந்தேன்ன லாபம்
தேவையில்லாத தாபம்  
தனிமையே போ இனிமையே வா 
நீரும் வேரும் சேர வேண்டும் 

காவலில் நிலை கொள்ளாமல் தாவுதே மனது 
காரணம் துணை இல்லாமல் வாடிடும் வயது 
ஆசைகொல்லாமல் சொல்லும் அங்கம் தாளாமல் துள்ளும் 
என்னை கேட்காமல் ஓடும் இதயம் உன்னோடு கூடும் 
விரகமே ஓ நரகமோ சொல் 
பூவும் முள்ளாய் மாறிப்போகும்

புது வெள்ளை மழை - pudhu vellai mazhai

புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது 
இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது 
இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது 
மனம் சூடான இடம் தேடி அலைகின்றது 

நதியே நீயானால் கரை நானே 
சிறு பறவை நீயானால் உன் வானம் நானே 

பெண் இல்லாத ஊரிலே அடி ஆன் பூ கேட்பதில்லை 
பெண் இல்லாத ஊரிலே கொடிதான் பூ பூப்பதில்லை 
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது 
இது கம்பன் பாடாத சிந்தனை உந்தன் காதோடு யார் சொன்னது 

நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப்பூ திடுக்கென்று மலரும் 
நீ வெடுக்கென்று ஓடினால் உயிர்ப்பூ சருகாக உலரும் 
இரு கைகள் தீண்டாத பெண்மையை என் கண்கள் பந்தாடுதோ 
மலர்மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ

வசீகரா என் நெஞ்சினிக்க - vaseegara en nenjinikka

வசீகரா என் நெஞ்சினிக்க உன் பொன்மடியில் தூங்கினால் போதும் 
அதே கணம் என் கண்ணுறங்கா முன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும் 
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானே 
ஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான் 

அடைமழை வரும் அதில் நனைவோமே
குளிர் காய்ச்சலோடு சிநேகம் 
ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்
குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய் 
அது தெரிந்தும் கூட அன்பே 
மனம் அதையே தான் எதிர்பார்க்கும் 
எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும் 
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் 

தினமும் நீ குளித்ததும் எனைத்தேடி 
என் சேலை நுனியால் உந்தன் 
தலைதுடைப்பாயே அது கவிதை 
திருடன் போல் பதுங்கியே திடீரென்று 
பின்னாலிருந்து என்னை 
நீ அணைப்பாயே அது கவிதை 
யாரேனும் மணி கேட்டால் அதை சொல்ல கூட தெரியாதே 
காதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே 



Tuesday, July 14, 2015

கல்யாண மாலை - kalyaana maalai

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே 
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் 
ஸ்ருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே 

வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதது 
மாலையிடும் சொந்தம் முடி போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது 
அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே 
மடி மீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே 
நல்ல மனையாளின் நேசமொரு கோடி 
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோழி 

கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து பாடென்றுசொன்னால் பாடதம்மா 
சோலை மயில் தன்னை சிறைவைத்து பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா 
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே 
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே 
துக்கம் சில  நேரம் பொங்கி வரும்போதும் மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே 
என் சோகம் என்னோடுதான்

Monday, July 13, 2015

அந்த நிலாவத்தான் - andha nilaavathaan

அந்த நிலாவத்தான் நான் கையில பிடிச்சேன் 
என் ராசாவுக்காக 
எங்க எங்க கொஞ்சம் நான் பாக்கிறேன் 
கண்ண மூடு கொஞ்சம் நான் காட்டுறேன் 

மல்லு வேட்டி கட்டியிருக்கு அது மேல மஞ்ச என்ன ஒட்டியிருக்கு 
முத்தழகி கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்க மஞ்ச வந்து ஒட்டிக்கிருச்சு 
மார்கழி மாசம் பாத்து மாருல குளிராச்சு 
ஏதுடா வம்பா போச்சு ரவிக்கையும் கெடையாது 
சொக்காம்பட்டி சேலை கட்டி பூத்திருக்கு பூஞ்சோலை 
பூவு ஒண்ணு கண்ணடிச்சா வண்டு வரும் பின்னால 
எக்குத்தப்பு வேணாம் ம்ஹ்ம் 

ரத்தினமே முத்தம் வெக்கவா அதுக்காக பட்டணம் பொய் வக்கீல் வெக்கவா 
வெட்கத்தையும் ஒத்தி வெக்கவா அதுக்காக மந்தையில பந்தி வெக்கவா 
ஓடிவாஓடப்பக்கம் ஒளியலாம் மெதுவாக 
அதுக்குள்ளே வேணாமுங்க ஆளுக வருவாக 
காத்தடிச்சா தாங்காதடி மல்லிகப்பூ மாராப்பு 
கையிருக்கு காவலுக்கு வேணாமுங்க வீராப்பு 
அடி போடி புள்ள எல்லாம் டூப்பு

பூ மாலை வாங்கி வந்தான் - poomaalai vaangi vanthaan

பூ மாலை வாங்கி வந்தான்  - தினம் தினம் 
பூக்கள் இல்லையே
செவியில்லை இங்கொரு இசை எதற்கு 
விழியில்லை இங்கொரு விளக்கெதற்கு 
நாளும் நாளும் அவள் நினைவில் இவன் அழுது 

கையில் கிண்ணம் பிடித்து விட்டான் 
இனிக்கின்ற விஷத்துக்குள் விழுந்துவிட்டான் 
ராகம் தாளம் மறந்துவிட்டான் 
ரசிகரின் கடிதத்தை கிழித்துவிட்டான் 
கடற்கரை எங்கும் மணல்வெளியில் 
காதலி காலடி தேடினான் 
மோகனம் பாடும் வேளையிலும் சிந்துவில் ராகம் பாடினான் 
விதியெனும் ஊஞ்சலில் ஆடினான் 
போதையினால் புகழ் இழந்தான் 
மேடையில் அணிந்தது வீதியில் விழுந்திட 

நேற்று சபதங்கள் எடுத்துவிட்டான் 
குடிக்கின்ற கோப்பையை உடைத்துவிட்டான் 
மீண்டும் அவள் முகம் நினைத்து விட்டான் 
சபதத்தை அவன் இன்று உடைத்துவிட்டான் 
இசைக்கொரு குயிலென்று பேரெடுத்தான் 
இருமலைத்தான் இன்று சுரம் பிரித்தான் 
மனிதர்கள் இருப்பதை மறந்துவிட்டான் 
மானத்தின் மானத்தை வாங்கிவிட்டான் 
போதையின் பாதையில் போகின்றான் 
தன் முகமே தான் மறந்தான் 
சூடவும் தோளில்லை ஆளில்லை 

Saturday, July 11, 2015

பருவமே புதிய பாடல் - paruvamae pudhiya paadal

பருவமே புதிய பாடல் பாடு 
இளமையின் பூந்தென்றல் ராகம் 

பூந்தோட்டத்தில் ஹோய் காதல் கண்ணம்மா 

சிரிக்கிறான் ஹோ ஹோ ஹோ ரசிக்கிறான் ராஜா 
சிவக்கிறாள் ஹோ ஹோ ஹோ துடிக்கிறாள் ராணி 
தீபங்கள் போலாடும் பார்வை சேரும் 

தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ 

அழைக்கிறான் ஹோ ஹோ ஹோ நடிக்கிறான் தோழன் 
அணைக்கிறான் ஹோ ஹோ ஹோ தவிக்கிறாள் தோழி 
காலங்கள் பொன்னாக மாறும் நேரம் 

Wednesday, July 8, 2015

மயக்கம் எனது தாயகம் - mayakkam enathu thaayagam

மயக்கம் எனது தாயகம் 
மௌனம் எனது தாய்மொழி 
கலக்கம் எனது காவியம் - நான் 
கண்ணீர் வரைந்த ஓவியம்

பகலில் தோன்றும் நிலவு கண் பார்வைக்கு மறந்த அழகு 
திரை மூடிய சிலை நான் துன்ப சிறையில் மலர்ந்த மலர் நான் 

நானே எனக்கு பகையானேன் என் நாடகத்தில் நான் திரையானேன் 
தேனே உனக்கு புரியாது அந்த தெய்வம் வராமல் விளங்காது 

விதியும் மதியும் வேறம்மா அதன் விளக்கம் நான் தான் பாரம்மா 

மதியில் வந்தவள் நீயம்மா என் வழி மறைத்தாள் விதியம்மா


மாலைபொழுதின் மயக்கத்திலே - maalaipozhuthin mayakkathile

மாலைபொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி 
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை காரணம் ஏன் தோழி 
காரணம் ஏன் தோழி 

இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர் யார் தோழி 
இன்பம் கனவில் துன்பம் எதிரில் காண்பது ஏன் தோழி 

மணமுடித்தவர் போல் அருகினிலே ஓர் வடிவுகண்டேன் தோழி 
மங்கை என் கையில் குங்குமம் தந்தார் மாலையிட்டார் தோழி 
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில் சாய்ந்துவிட்டேன் தோழி - அவர் 
மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி 
பறந்து விட்டார் தோழி 

கனவில் வந்தவர் யாரென கேட்டேன் கணவர் என்றார் தோழி 
கணவர் என்றால் அவர் கனவு முடிந்ததும் பிரிந்தது ஏன் தோழி 
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் இதில் மறைந்தது சில காலம் 
தெளிவும் அறியாது முடிவும் தெரியாது மயங்குது எதிர் காலம் 
மயங்குது எதிர் காலம்

சின்னஞ் சிறிய வண்ணப் பறவை - chinna chiriya vanna paravai

சின்னஞ் சிறிய வண்ணப் பறவை என்னத்தை சொல்லுதம்மா - அது 
இன்னிசையோடு தன்னை மறந்து சொன்னதை சொல்லுதம்மா 

உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை 
உலகம் தெரியவில்லை 
ஒவ்வொரு நாளும் மாறுகின்ற உள்ளம் புரியவில்லை
உலகம் தெரியவில்லை உலகம் தெரியவில்லை 
ஒன்றும் புரியவில்லை ஒன்றும் புரியவில்லை 

மனதினிலே தோன்றும் மயக்கங்கள் கோடி - அந்த 
மயக்கத்திலே ஆடுதே ஊஞ்சலாடி 

வாசல் ஒன்றிருக்கும் 
ஆசைகொண்ட நெஞ்சம் தனில் வழி இரண்டிருக்கும் 
கண்களிலே தோன்றும் காட்சிகள் கோடி - அந்த 
கவர்ச்சியிலே பாடுதே ஊஞ்சலாடி


ஒரு நாள் போதுமா - Oru naal podhuma

ஒரு நாள் போதுமா இன்றொரு நாள் போதுமா
நான் பாட இன்றொரு நாள் போதுமா
நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா
புது நாதமா சங்கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா 

ராகமா சுக ராகமா
கானமா தேவ கானமா
என் கலைகிந்த திரு நாடு சமமாகுமா
என் கலைகிந்த திரு நாடு சமமாகுமா
நாதமா கீதமா அதை நான் பாட இன்றொரு நாள் போதுமா

குழலென்றும் யாழென்றும் சிலர் கூறுவார்
என் குரல் கேட்ட பின்னாலே அவர் மாறுவார்
அழியாத கலையென்று எனை பாடுவார்
எனை அறியாமல் எதிர்ப்போர்கள் எழுந்தோடுவார்

இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ 
எழுந்தோடி வருவாரன்றோ...எழுந்தோடி...தோடி...இசை கேட்க எழுந்தோடி வருவாரன்றோ 
எனக்கிணையாக தர்பாரில் எவரும் உண்டோ
தர்பாரில் எவரும் உண்டோ....தர்பாரில் எவரும் உண்டோ....
எனக்கிணையாக  தர்பாரில் எவரும் உண்டோ 
கலையாத மோகன சுவை நானன்றோ மோகன சுவை நானன்றோ 
மோகனம்....
கலையாத மோகன சுவை நானன்றோ
கானடா ஆ .....என் பாட்டு தேனடா 
இசை தெய்வம் நானடா  

ஏதோ நினைவுகள் - aedho ninaivugal

ஏதோ நினைவுகள் கனவுகள் மனதிலே மலருதே 
காவேரி ஊற்றாகவே காற்றோடு காற்றாகவே 
தினம் காண்பது தான் 

மார்பினில் நானும் மாறாமல் சேரும் காலம் தான் வேண்டும் 
வான் வெளி எங்கும் என் காதல் வாழும் நாள் வேண்டும் 
தேவைகள் எல்லாம் தீராத நேரம் தேவன் நீ வேண்டும் 
தேடும் நான் வேண்டும் 

நாடிய சொந்தம் நான் காணும் பந்தம் இன்பம் பேரின்பம் 
நாளொரு வண்ணம் நான் காணும் வண்ணம் ஆஹா ஆனந்தம் 
காற்றினில் செல்லும் என் காதல் எண்ணம் ஏங்கும் எந்நாளும் 
ஏக்கம் உள்ளாடும்