Thursday, September 24, 2015

ஆட்டமா தேரோட்டமா - aattamaa thaerottama

aattamaa thaerottama nottama kadhiraatamaa
vegu naalaaga unnaiththaan kanni naan aaduren
valai poduren paaduren pathil theduren

eraadha medai ingu ilamaanum aeri
aadaatha sadhiraatam unakaga aadi
yaarukkum puriyaatha pudhu paattu paadi
ammadi valaithene kanakkagha thedi
raakozhi satham kaetkudhu en raasave poongatrum  vattam poduthu
veerappu kannil pattathu enai nee theda maaraapum mella chuttadhu
ponmaanum thulli thulli kondaatam podaatho
punnaana nenjil indru kaayam thaan aaradho
kanni ennam mudivathu thinnam ahaaa haa...

yaarukkum theriyaadhu naan potta mudichu
nee vanthu sugamaakki tharavenum mudichu
naanunai kaanamal noolaa elachu
nee sellum thadam paarthu valai pottu valachu
kannale katti vaikkava ada maama en kaiyaale pottu vaikavaa
poopanthal poda sollavaa ada melangal thaalangal solli thattava
poomanjam mella pottu porkolam kaanboma
poraattam pona pinbu poobaalam kaetpoma
kanni ennam mudivathu thinnam aahaa...haaa...

ஆட்டமா தேரோட்டமா நோட்டமா கதிராட்டமா  
வெகு நாளாக உன்னைத்தான் எண்ணித்தான் கன்னி நான் ஆடுறேன் 
வலை போடுறேன் பாடுறேன் பதில் தேடுறேன் 

ஏறாத மேடை இங்கு இளமானும் ஏறி  
ஆடாத சதிராட்டம் உனக்காக ஆடி 
யாருக்கும் புரியாத புதுப்பாட்டு பாடி 
அம்மாடி வளைத்தேனே கணக்காக தேடி 
ராக்கோழி சத்தம் கேட்குது என் ராசாவே பூங்காற்றும் வட்டம் போடுது 
வீராப்பு கண்ணில் பட்டது எனை நீ தேட மாராப்பும் மெல்ல சுட்டது 
பொன்மானும் துள்ளி துள்ளி கொண்டாட்டம் போடாதோ 
புண்ணான நெஞ்சில் இன்று காயம்தான் ஆறாதோ 
கன்னி எண்ணம் முடிவது திண்ணம் அஹா ஹா....

யாருக்கும் தெரியாது நான் போட்டமுடிச்சு 
நீ வந்து சுகமாக்கி தரவேணும் முடிச்சு 
நானுன்னை காணாமல் நூலாக எளச்சு  
நீ செல்லும் தடம் பார்த்து வலை போட்டு வளைச்சு 
கண்ணாலே கட்டி வைக்கவா அட மாமா என் கையாலே பொட்டு  வெக்கவா 
பூப்பந்தல் போடசொல்லவா அட மேளங்கள் தாளங்கள் சொல்லி தட்டவா 
பூமஞ்சம் மெல்ல போட்டு போர்க்கோலம் காண்போமா 
போராட்டம் போன பின்பு பூபாளம் கேட்போமா 

கன்னி எண்ணம் முடிவது திண்ணம் அஹா ஹா....




ஆறு மனமே ஆறு - aaru maname aaru

aaru maname aaru antha aandavan kattalai aaru
thaernthu manithan vaazhum vakaikku dheyvathin kattalai aaru

ondre solvaar ondre seyvaar ullathil ulladhu amaithi
inbathil thunbam thunbathil inbam iraivan vagutha niyathi
sollukku seygai ponnaagum varum thunbathil inbam pattagum
indha irandu kattalai arintha manathil ella nanmaiyum undaagum

unmaiyai solli nanmaiyai seythaal ulagam unnidam mayangum
nilai uyarum podhu panivu kondaal uyirgal unnai vanangum
unmai enbathu anbaagum perum panivu enbathu panpaagum
indha naangu kattalai arintha manathil ella nanmaiyum undaagum

aasai kobam kalavu kolbavan pesa therintha mirugam 
anbu nandri karunai kondavan manitha vadivil dheyvam
idhil mirugam enbathu kallamanam uyar dheyvam enbathu pillai manam
indha aaru kattalai arintha manathu aandavan vaazhum vellai manam

ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு 
தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு 
தெய்வத்தின் கட்டளை ஆறு 

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி 
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி 
சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்மத்தில் இன்பம் பட்டாகும் 
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் 

உண்மையை சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும் 
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும் 
உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும் 
இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும் 

ஆசை கோபம் களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம் 
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம் 
இதில் மிருகம் என்பது கள்ளமனம் உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் 
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம் 

ஆலப்போல் வேலப்போல் - aalapol velapol

aalapol velapol aalamvizhuthu pol maaman nenjil naanirupene
naalapol rendapol naalum pozhuthu pol naanum angu nindruripene
pathil kelu adi kannamma
nalla naalu konjam sollamma ennama kannamma

emmanasa maamanuku pathirama kondu sellu
innum enna venuminnu utharavu podachollu
potu manjal thaanarachu nithamum neeradachollu
meenatchi kungumatha nethiyila soodachollu
sonnatha naanum kaetkiren sorname anga poi kooridu
anjala maala poduren annathin kaathila othidu
maaman nenaputhaan maasakkanakile paada paduthuthennaiyae
pudhu poovaa vedicha pennaiyae

velanguchi naan valaichi villu vandu senju thaaren
vandiyila vanchi vantha valachi katti konja vaaren
aalanguchi naan valachi pallakonnu senjutharen
pallakula maaman vantha pagal mudinchu konja vaaren
vattamaay kaayum vennila kolludhe kolludhe raathiri
kattilil podum paayum thaan kuthuthe kuthoosi maathiri
oorum urangattum oosai adangattum kaathaa paranthu varuven
pudhu paata padichu tharuven


ஆலப்போல் வேலப்போல் ஆலம்விழுது போல் மாமன் நெஞ்சில் நானிருப்பேனே 
நாலப்போல் ரெண்டப்போல் நாளும் பொழுது போல்  நானும் அங்கு நின்றிருப்பேனே 
பதில் கேளு அடி கண்ணம்மா 
நல்ல நாளு கொஞ்சம் சொல்லம்மா என்னம்மா கண்ணம்மா 

எம்மனச மாமனுக்கு பத்திரமா கொண்டு செல்லு 
இன்னும் என்ன வேணும்மினு உத்தரவு போடச்சொல்லு 
பொட்டு மஞ்சள் தானரச்சு நித்தமும் நீராடச்சொல்லு 
மீனாட்சி குங்குமத்த நெத்தியில சூடச்சொல்லு 
சொன்னத நானும் கேட்கிறேன் சொர்ணமே அங்க போய் கூறிடு 
அஞ்சல மாலை போடுறேன் அன்னத்தின் காதில ஓதிடு 
மாமன் நெனப்புதான் மாசக்கணக்கில பாடா படுத்துதென்னையே 
புது பூவா வெடிச்ச பெண்ணையே 

வேலங்குச்சி நான் வளச்சி வில்லு வண்டி செஞ்சுதாறேன் 
வண்டியில வஞ்சி வந்தா வளச்சு கட்டி கொஞ்ச வாறன் 
ஆலங்குச்சி நான் வளச்சி பல்லக்கொண்ணு செஞ்சுதாறேன் 
பல்லக்குல மாமன் வந்தா பகல் முடிஞ்சு கொஞ்ச வாறன் 
வட்டமாய் காயும் வெண்ணிலா கொல்லுதே கொல்லுதே இராத்திரி 
கட்டிலில் போடும் பாயும்தான் குத்துதே குத்தூசி மாதிரி 
ஊரும் உறங்கட்டும் ஓசை அடங்கட்டும் காத்தா பறந்து வருவேன் 
புது பாட்டா படிச்சு தருவேன் 

ஆடும் நேரம் இதுதான் - aadum neram idhuthaan

aadum neram idhuthaan idhuthaan vaa vaa vaa vaa
paadum neram idhuthaan idhuthaan vaa vaa vaa vaa
pogira ilamaiyum meendum varumaa aadidu paadidu ilamaiyil
theykira inimai thirumba varuma koodidu paadidu thanimaiyil
poovalla thenalla naanindru naanalla

melogam boologam maarum maaraadhu thaagangal thaan
noolagum poonthegam aegum naalthorum mogangal thaan
aadumpodhu thegam theyum paarkum podhu paarvai saayum
engengum inbam vanthu koodaatho vaa inge inge

naanendru neeyendru aedhu pedhangal ingae illai
veedendru naadendru aedhu bothaikku ellai illai
kaalai aedhu maalai aedhu kaanum podhu kaalam aedhu
aanantham nammai vittu pogaathu vaa ingae ingae

ஆடும் நேரம் இதுதான் இதுதான் வா வா வா வா
பாடும் நேரம் இதுதான் இதுதான் வா வா வா வா
போகிற இளமையும் மீண்டும் வருமா ஆடிடு பாடிடு இளமையில் 
தேய்கிற இனிமை திரும்ப வருமா கூடிடு பாடிடு தனிமையில் 
பூவல்ல தேனல்ல நானின்று நானல்ல 

மேலோகம் பூலோகம் மாறும் மாறாது தாகங்கள் தான் 
நூலாகும் பூந்தேகம் ஏங்கும் நாள்தோறும் மோகங்கள் தான் 
ஆடும்போது தேகம் தேயும் பார்க்கும் போது பார்வை சாயும் 
எங்கெங்கும் இன்பம் வந்து கூடாதோ வா இங்கே இங்கே 

நானென்று நீயென்று ஏது பேதங்கள் இங்கே இல்லை 
வீடென்று நாடென்று ஏது போதைக்கு எல்லை இல்லை 
காலை ஏது மாலை ஏது காணும் போது காலம் ஏது 
ஆனந்தம் நம்மை விட்டு போகாது வா இங்கே இங்கே