Thursday, July 16, 2015

யாரும் விளையாடும் - yaarum vilayaadum

யாரும் விளையாடும் தோட்டம் 
தினம்தோறும் ஆட்டம் பாட்டம் 
போட்டாலும் பொறுத்துக்கொண்டு பொன்னுதரும்  சாமி 
இந்த மண்ணு நம்ம பூமி 
கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு 
ஆறோடும் ஊரப்பாத்து டேரா போடு 

கூடமும் மணிமாடமும் நல்ல வீடும் உண்டு 
தேடவும் பள்ளு பாடவும் பள்ளிக்கூடமுண்டு 
பாசமும் நல்ல நேசமும் வந்து கூடுமிங்கு 
பூசலும் சிறு ஏசலும் தினந்தோறும் உண்டு 
அன்பில்லா ஊருக்குள்ள இன்பம் இல்ல 
வம்பில்லா வாழ்க்கையென்றால் துன்பம் இல்ல 

கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு 
ஆறோடும் ஊரப்பாத்து டேரா போடு 

ஆத்தி இது வாத்துக்கூட்டம் 
பாத்தா இவ ஆளு மட்டம் 
போட்டா ஒரு ஆட்டம் பாட்டம் 
சொல்லுறத கேளு நீ வேற ஊரைப்பாரு 
நான் சொல்லுறத கேளு கொஞ்சம் வேற ஊரைப்பாரு 
டேராவ பாத்து போடு ஓலத்தோடு வேறோரு போயிச்சேரு நேரத்தோடு 

ஆவியாகி போன நீரும் மேகமாச்சு 
மேக நீரும் கீழ வந்து ஏறியாச்சு 
ஆறு என்ன ஏறி என்ன நீரு ஒண்ணு  
வீடு என்ன காடு என்ன பூமி ஒண்ணு 
கடலுக்குள் சேரும் தண்ணி உப்பாகுது 
சிப்பிக்குள் கூடும் தண்ணி முத்தாகுது 
சேராத தாமரைப்பூ தண்ணி போலே மாறாது எங்க வாழ்வு வானம் போலே