Thursday, May 28, 2015

மஞ்ச காட்டு மைனா - manja kaattu maina

மஞ்ச காட்டு மைனா என்ன கொஞ்சி கொஞ்சி போனா 
மஞ்ச காட்டுக்குள்ள அவ காதல் சொல்லி போன 
காதல் கலவரம் பூக்கும் அது இரவினில் வெயிலும் தாக்கும் 
பூக்கள் பொதுக்குழு கூட்டும் நீ தலைமை தாங்க கேட்கும் 
கன்னியே காதலில் முத்தங்கள் முதலீடு 
இரவெல்லாம் லாபமே இழப்பது கிடையாது 
மாயனே மாயனே இது மன்மத கதை கேளாய் 
என் சுவாசம் என்னிடம் இல்லை இது காதல் தேசத்தின் எல்லை

ஆடை இருந்தது பார்வை நுழைந்தது கண்களின் வெற்றியடி 
இரவினில் அடிக்கடி உன்னால் நெருக்கடி இருளுக்கு வெற்றியடா 
கட்டுக்கடங்கவில்லை நிலைமை தான் கட்டில் முழுக்க இனி வன்முறை தான்
விட்டு கொடுத்துவிடு ஒரு முறை தான் கல்யாணம் என்பது வேண்டும் -- (மஞ்ச காட்டு)

இதயம் துடிக்குது படையும் எடுக்குது சடங்கை துவங்கிடவா 
சேலையும் வருந்துது பதவியும் இழந்தது  இடையில் தேர்தலினால் 
கழுத்து வரைக்கும் வந்த கண்களுக்கு வேகத்தடையும் ஒன்று இங்கிருக்கு
தடுத்து நிறுத்து இந்த விறுவிறுப்பு பெண் நாணம் சொல்லுது பாரு -- (மஞ்ச காட்டு)